பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பொய்ம் முகங்கள் ஹெட்மாஸ்டர் வந்துவிட்டதாக யாரோ வந்து தெரி வித்தார்கள். சுதர்சனன் டேவிட் கந்தையாவிடம் விடை பெற்றுக் கொண்டு தலைமையாசிரியரைப் பார்ப்ப்தற்குச் சென்றான். - - அங்கே தலைமையாசிரியர் அறை முகப்பில் பூரீ சென்னி. மலை முருகன் துணை' என்று பெரிதாகப் பிளாஸ்டிக் எழுத்துக்களில் எழுதிப் போட்டிருந்தது. உள்ளே நுழைந்: தால் தலைமையாசிரியரின் தலைக்கு மேலும் அப்படியே எழுதியிருந்தது. - - - நடுத்தர வயதுத் தலைமையாசிரியர் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு நிமிர்ந்து சுதர்சனனை ஏறிட்டுப் பார்த்தார். - "என்ன வேணும்: சொல்லுங்க...' "உங்க விளம்பரம் ஹிண்டு விலே பார்த்தேன்." ' என்ன விளம்பரம்? சட்னு புரியும்படியாத்தான் சொல்லுங்களேன்.” • , - 'அதான் அந்தத் தமிழ்ப் பண்டிட் தேவைங்கிற விளம்பரம்." - - ... . "ஒ அதுவா? நீங்களும் அதுக்கு அப்ளை பண்றீங்களா?'. ஆமாம்! அப்ளிகேஷனை நேரிலேயே குடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன். - - சரி குடுங்க...வாங்கிக்கறேன். அவர் அவனை உட். காரச் சொல்லி வேண்டவுமில்லை. அவன் உட்கார விரும்ப வுமில்லை. கொடுத்து விட்டுப் போனால் போதும் என்ற அவசரத்தில் தான் அவனும் இருந்தான். உட்கார விரும்பி யிருந்தால் அவர் சொல்லித்தான் ஆகவேண்டும் . என்ற உப்சாரத்துக்காகக் காத்திராமல் அவனே ஒரு நாற்காலியை. இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பான். - ് அவன் , விண்ணப்பத்தைத் தலைமையாசிரியரிடம் கொடுத்துவிட்டு ஒரு விநாடி தயங்கி நின்றான்.