230 பொய்ம் முகங்கள் ' வருஷக் கணக்கெல்லாம் சொல்றாப்ல ஒண்னு: மில்லே ஏதோ கொஞ்ச காலம் இருந்தேன். அதாவது அவங்களுக்கு என்னையும் எனக்கு அவங்களையும் பிடிக்கிற வரை இருந்தேன்னு வச்சுக்குங்களேன்.' - "ஆமாமா, ஒரே எடத்திலே மொளையடிச்சாப்பில இருக்கணும்னு அவசியமா என்ன? "யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு தானே நம்ப தமிழ்ப் புலவனே பாடி வச்சிருக் கான்?'
- அதுனாலேதான் சர்க்கார் ஸ்கூல் காலேஜ்களிலே எல்லாம் அடிக்கடி எந்த ஊருக்காவது டிரான்ஸ்ஃபர் அண்றாங்கன்னு தோணுது. யாதும் ஊரே பாடினவனே ,டிரான்ஸ்பரை' நினைச்சுத்தான் அப்படிப் பாடியிருக் கணும்.’’
'ரொம்ப தமாஷாப் பேசlங்க. நீங்க நம்ப ஸ்கூலுக் வந்தாப் போதும். நல்லாப் போது போவும்.' . 'ஆனா வெறும் தமாவுக்காகவே யாரும் வேலை தர மாட்டாங்களே?' என்று அவருக்கு உடனே பதில் சொல்லிச் சிரித்தான் சுதர்சனன். - - "செங்குந்தர் திலகம் தொரப்பாக்கம் முருகேச முதலி யாரைத் தெரியுங்களா உங்களுக்கு? ஏன்? எனக்கு யாரையும் தெரியாது." 'இல்லே! அவரு ஒரு லெட்டர் குடுத்தார்னா இந்த வேலை உங்களுக்குக் கிடைச்ச மாதிரின்னு வச்சுக்குங் - "அவரு எங்கே இருக்காரோ? "பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியுமுங்கள்ே டி.எம்.எம். எக்ஸ்போர்ட்டர்ஸ்னு கொடவுன் ஸ்ட்ரீட் லியே அவுங்கதான் பெரிய கார்ப்பெட் எக்ஸ்போர்ட் டர்ஸ்." *・・ , .... ...." - ・ 、 , .