நா. பார்த்தசாரதி - 盛3器 சியே வரும். அதுதான் உலக வரலாறு. அடிச்சிக்கிட்டு போய் ஒழியறத்துக்கு முன்னாடிக் கொஞ்சநேரம் எல்லாருக் கும் நெறையத் தெரியற மாதிரி இதெல்லாம் மேலாக மிதக் கும். அது போலத்தான் இதுவும் இப்ப மேலாகத் தெரியுது.' - . . . . . காவிக்கு மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பளம். ஆபிஸ் கார் ஒண்னு குடுத்திருக்காங்க. இன்னிக்கி அமெரிக்கா நாளைக்கி ஜப்பான் நாளன்னிக்கி ஆஸ்திரேலியான்னு பறந்துக் கிட்டிருக்காரு. . "பூர்ஷ்வா சமூக அமைப்பில் பிம்ப்'களும் இடைத் தரகர்களும் லாப வேட்டைக்காரர்களும் தான் தற்காலிக மான பல வசதிகளோடு செழிப்பாக இருப்பார்கள். அது தவிர்க்க முடியாதது.' . . "எங்க பத்திரிகை முதலாளிக்குத் தமிழ் படிக்கத் தெரி யாது. சர்க்குலேஷன் நிறைய இருந்தால் போதும். ஒவ்வொரு பத்தாயிரம் பிரதி ஏறினதும் திருப்பதிக்குப் போயி நூறு ரூபாய் உண்டியல்லே போட்டுச் சாமி கும்பிட் டிட்டு வந்துடுவாரு! . . . . . . . லாபத்துலே ச்ாமிக்கு லஞ்சமா?" - . . . . ஆசிரியர் காவியும் கூடப் போய்ச் சாமி கும்பிட்டுட்டு வருவாரு. அவருக்கும் சாமி பக்தி நிறைய உண்டு. - "அதுலே எது அதிகம்? சாமி பக்தியா? பொம்பளை - பக்தியா? இந்த ஊர்லே சில பேரு ரெண்டையுமே ஒரே மாதிரித்தான் பண்றாங்க. பொம்பளைக்கும் திறையச் செலவழிக்கிறாங்க. எது மேலே அவங்களுக்கும் ஆசை அதிகம்னு தான் தெரியலே?" -- "அது சரி: நீங்க எண்ணண்ணே செய்றிங்க? உங்களைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே..." மதிவாணன் பேச்சை மாற்ற முயன்றதுபோல் தெரிந்தது. . . . . . . .
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/237
Appearance