பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பொய்ம் முகங்கள் - "நானா? நான் ஏதோ ஒரு வேலைக்காகத் தேடி அலைஞ்சிட்டிருக்கேன். இன்னும் எதுவும் சரியாகக் கெடைக்கலே...' . - - - - "எங்கண்ணே தங்கியிருக்கிங்க...' "இங்கேதான் திருவல்லிக்கேணியிலே......நீங்க...?" 'அட! அதிசயமாவில்ல்ே இருக்கு. நானும் இங்கேதான் தங்கியிருக்கேன், நீங்களும் இங்கேயே இருந்துமா இத்தினி நாள் ஒருத்தர்கொருத்தர் பார்த்துக்காம இருக்கோம்?" "அது இந்த மாதிரி ஊர்ல்ே ரொம்ப சகஜம். அடுத்த வீட்டுக்காரனைத் தெரிஞ்சுக்கவே ஆறுமாசம் ஆகிற மாதிரி வறட்டு ஜம்பமும் அசட்டு நாகரிகமும் பிடிச்ச ஊரு இது...' ‘. . . . . "உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா எங்க ஆபீஸி லேயே எதினாச்சும் புரூஃப் ரீட்ர் அது இதுன்னு காலி இருக் காங்கிறதை விசாரிக்கலாம். தமிழ்ப் பத்திரிகை நடத்தற துக்குக் கொஞ்சம் தமிழ் தெரிஞ்சவங்களோட உத்வியும் தேவைன்னு இப்பல்லாம் நெனைக்க ஆரம்பிச்சிருக்காங்க." 'அதாவது தமிழிலே விஷயஞானமுள்ளவன் ஒருத்தன் தமிழ்ப் பத்திரிகை ஆபீஸிலே இருந்தா அதுனாலே பெரிய, எடைஞ்சல் எதுவும் இல்லேன்னு நினைக்கிற அளவு தாராள மனசு வந்திருக்கு... இல்லியா? மாமனார் மாமியார் சிர்வரிசை, தலை தீபாவளி, பட்டாஸ், மைத்துனன் ஜோக். நாத்தனார்க் கொடுமை இதுக்கு மேல்ே சமூகப் பிரச்சனை களே இல்லேன்னு பண்ணி வச்சிருந்தானுவ...' "இப்ப நிலைமை கொஞ்சம் மாறியிருக்கு அண்ணோ இல்லாட்டி நான் வேலை பார்க்க முடியுமா?" . . . . . . . .” நீங்க என்ன பெரிய குபேரன். வேலையா பார்க்கி நீங்க? சும்மாக் கன்ன்ாச் சன்னாத் திருத்திக்கிட்டிருக்கீங்க, அவ்வளவு தானே?' . . . - - ஏதோ அதாச்சும் குடுத்திருக்காங்களே?"