உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பொய்ம் முகங்கள் தற்சான்றைப் பற்றி அவனுடைய அந்தரங்க மனம் களிப் படைந்து கொண்டிருந்தது. தலைமையாசிரியர் ஏன் சின்ன சின்ன விஷயங்களில்கூடத் தன்னிடம் அதிகமாக அலட்டிக் கொள்கிறார் என்பதன் காரணம் இப்போது அவனுக்கு. மெல்ல மெல்லப் புரியத் தொடங்கினாற் போலிருந்தது. கிராமங்களையும் சிற்றுார்களையும் பற்றி நாவலாசிரி யர்களும், இலட்சியவாதிகளும், நகரவாசிகளும் அவனுள் ஏற்படுத்தியிருந்த பிரமைகள் இப்போது மெல்ல மெல்லக் கலையத் தொடங்கின. கள்ளங்கபடமில்லாத மக்கள் கிராமங்களிலும், சிற்றுார்களிலும்தான் இருக்கிறார்கள் என நினைப்பதே தவறான அநுமானம் என்று தோன்றியது. வஞ்சகமும், கள்ளமும் கபடமும், குறுகிய நோக்கங்களும், சாதி வெறியும் கிராமங்களில்தான் அதிகமாக இருப்பது தெரிந்தது. இரயில்களும், நெருக்கடியான் பஸ்களும், பர பரப்பான பொதுவாழ்வும் நகரங்களில் ஒரளவு மக்களைச் சாதி வித்தியாசமின்றி நெருங்கிப் பழகச் செய்திருந்தாலும் கிராமங்களில் நிலைமை இன்னும் அப்படியே நீடிப்பது தெரிந்தது. - - - சுதர்சனன் ஆதர்சபுரத்திற்கு வந்து அதிககாலம் ஆவதற்குள்ளேயே அவனுக்கு இது புரிந்திருந்தது. ஆதர்ச, புரத்தில் ஒவ்வொரு சாதியாருக்கும் தங்கள் தங்கள் சாதி களில் அழுத்தமான பற்றுதலும், வேறு சாதிகளின் மேல் அழுத்தமான வெறுப்பும் இருந்தன. ஊரில் சாதி அடிப் படையிலேயே தெருக்களும், கோயில்களும், பழக்கவழக்கங் களும், ஏற்பாடுகளும் இருந்தன. சாதி உணர்வு மறைய வேண்டுமானால் கிராம அமைப்பே மாற வேண்டும் போலிருந்தது. மொத்தம் எட்டுத் தெருக்களையுடைய ஆதர்சபுரத்தில் நான்கு கோவில்கள் இருந்தன. ஒரு சிவன் கோவில், ஒரு பெருமாள் கோயில், ஊரருகில் ஒதுங்கியிருந்த சேரியை ஒட்டி ஒரு சர்ச், முஸ்லீம் தெருவை ஒட்டி ஒரு மசூதி என்று அவை அங்கங்கே அமைந்திருந்தன. இவை தவிர ஊரைச்