பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 239 ஆகவே அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும்: போய்விட்டது. நாட்களும் கையிலிருந்த காசும் கரையத். தொடங்கின. லஞ்ச ஊழலுக்காகச் சிசுபாலனாரை அவன் முன்பே ஒரு கூட்டத்தில் கடுமையாகச் சாடிப் பேசியிருந்: தான். . . . . " . . . . அழகு லாட்ஜ் இருந்த அதே தெருவிலுள்ள ஓர் அச்சகத் தில் நிரந்தரமில்லாத-அவ்வப்போது திருத்துகிற புரூஃப் களுக்கு உதிரியாகப் பணம் கிடைக்கிறமாதிரி ஒரு வேலை அகப்பட்டது. சுதர்சனன் அந்த அச்சகத்துக்குப் போயும் திருத்தலாம், அவனது அறையைத் தேடியும் புரூஃப்கள் வரும், : - . . . . . - அவனைய்ோ, அவனதுசுதந்திரத்தையோ, எதிர்நீச்சலி டும் குணத்தையோ ஒரு வகையிலும் பாதிக்காத வேலையா யிருந்தது. அது. மாதம் இருநூறு ரூபாய்க்குக் குறையாமல் கிடைத்தது. புரூஃப் கொஞ்சம் அதிகம் வந்த மாதங்களில் இரு நூற்றைம்பது கூடக் கிடைத்தது. வேலை அவனை எந்த விதத்திலும் அடக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை. அவன் அந்த அச்சகத்தில் மாதச் சம்பளத்துக்குச் சேர்ந்திருந் தால் ஒருவேளை அப்படிக் கட்டுப்பாடு வந்துவிட்டிருக்கக் கூடும், . . . . . பிழைதிருத்துவதைவிட அதிக முனைப்போடு சமூகத் தைத் திருத்திவிடவும் ஆசைப்பட்டான் சுதர்சனன். அச்சுப் பிழை திருத்துவதைப்போல் சமூகம் அவ்வளவு எளிதாகத் இருந்திவிடத் தயாராவில்லை. தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் எங்கே எந்த மூலையில் திரும்பினாலும் ஊழலும், ஒழுங்கின்மையும் தெரிந்தன. மனிதர்கள் ஏமாறினார்கள் அல்லது ஏமாற்றி ஊழல்காரரையும் ஒழுங்கின்மையின் உற்பத்திஸ்தானத் தையும் கண்டு மக்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் அஞ்சி. னார்கள். மட்ங்கினார்கள். ஒடுங்கினார்கள். ஒலந்தார் கள். நெளிந்து மெல்ல தழுவினார்கள். -