உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பொய்ம் முகங்கள் அவர்களையும் அவைகளையும் பார்த்துச் சிறிதும் முனை மழுங்கிவிடாத கூர்மையோடு போராடவும், எதிர் நீச்சலிடவும் சுதர்சனன் தயாராகக் காத்திருந்தான். முன்பு தான் பேசிய ஒரு கூட்டத்தில் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் சிசுபாலனார் லஞ்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு மார்க் போடுவது பற்றியும் பி.எச்.டிக்கு ரேட் வாங்கிப் பங்கீடு செய்து தருவது பற்றியும் சாடிய தால் தான் சுதர்சனன் தன் வேலை வாய்ப்பை இழந்திருந் தான. அதிலிருந்து அவனைத் 'தமிழ்த்துரோகி” என்று "பிராண்ட் செய்து பிறரிடம் துஷ்பிரசாரம் செய்யலானார் அவர். டாக்டர் சிசுபாலனார் தமிழறிந்தது கொஞ்சம். அதிகம் அறிந்தது காக்கை பிடிப்பது. காக்கை பிடித்தே வாழ்வில் முன்னுக்கு வந்தவர் அவர். அறிவுக்கும் அவருக் கும் ஒரு காத தூரம். - எந்தத் தமிழன் காக்கை பிடித்தாலும் அவன் சுய மரியாதையற்றவன்-என்பது சுதர்சனனின் கொள்கை. அதை அவன் உரத்துக் கூறிச் சிசுபாலனாரைக் கண்டித் தான். - - - அவனுக்கு எங்கும் எதிலும் தமிழ்தொடர்பான உத்தி யோகம் எதுவும் கிடைத்துவிடாமல் இருக்கும்படி சிசு பாலனார் அரும்பாடுபட்டுக் கவனித்துக்கொண்டார். சிசுபாலனாரின் எதிர்ப்பைத் துச்சமாக நினைத்தான் சுதர்சனன். அவரைவிடப் பெரிய பதவிகளிலுள்ள தீயவர் களையே எதிர்த்துக் கொள்ளவும் அவன் தயாராயிருந்தான். யாருக்கும் எதற்கும் அவன் அஞ்சவில்லை. கூர்மழுங்க வில்லை. - நன்றாகத் திட்டிய க்த்தியின் நுனியைப்போல் அவன் அறிவு கூராயிருந்தது. நேர்மை வளையாமல் இருந்தது, திமிர்வு மடங்காமல் இருந்தது.