நா. பார்த்தசாரதி 241 கொடுத்தும் கொளல் வேண்டுமன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை' என்ற குறள் கூறுவது போல் சமூக விரோதிகளின் பகைமை விலை கொடுத்தாவது வாங்கி எதிர்க்க ஆசைப்பட்டான் அவன். - காலம் ஓடியது. தனது போர்க்குணம் மழுங்காமல், அவன் சென்னையில் வாழ்ந்தான். சென்னையின் கலப்படச் சூழ்நிலை கூட இவனைக் கட்டுக்குலைக்க முடியவில்லை. மிக அதிகப்பணமும், பெரிய உத்தியோகமும், நிறைய வசதி களும் தனது எதிர்நீச்சலிடும் குணத்தை மாற்றித்தன்னைக் கூர் மழுங்கப் பண்ணிவிடுமோ என்று தயங்கி அவற்றை ஏற். காமலே ஒரு சீர்திருத்தத் துறவியாக நோன்புநோற்று விரத மிருந்து வாழ்ந்தான் அவன். சமூகம் நலம் பெறப் பத்திய மிருப்பவனைப்போல இருந்தான். குழந்தை நலம்பெறக் கசப்பான மருந்தையும் உண்ணும் தாய்போல தான் சிரமப் பட்டான். - அவனைப் பலர் பிழைக்கத்தெரியாதவன் என்றார்கள். வேறு சிலர் கிறுக்கு என்றார்கள். வேறு சிலர் கடவுள் நம்பிக். கையற்றவன் என்றார்கள் ஒத்துப்போகத் தெரியாத முரடு என்றார்கள். என்னென்னவோ சொன்னார்கள். எப்படி எப். டியோ சொன்னார்கள். அவற்றுக்காக அவன் கவலைப்பட வில்லை. தன்னைப் பற்றிய பயம் இல்லாததால் பிற்ருக்கு. அவன் அஞ்சவில்லை, குற்றமுள்ள பிறரை அஞ்சவைத் தான். *. - - கோடி ரூபாய் வருமானமுள்ள ஒரு கோழையாயிருப் பதைவிட அன்றாடம் உழைத்துக் கூலிக்காசு வாங்கும் தன் மானமுள்ள தீரனாயிருக்கவே அவன் விரும்பினான். அது அவன் கூர்மைக்குப் பாதுகாப்பு அளித்தது. எவ்வளவு காலமானாலும் தீட்டிய அம்புபோல்கராகப் பாயத் தயாராயிருக்க வேண்டுமென்பது வாழ்வைப்பற்றிய
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/243
Appearance