உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 23 சுற்றிலும் பத்து மைல் வட்டத்திற்கு அமைந்திருந்த மரத் தடிக் கோவில்கள், காவல் தேவதைகளின் ஆலயங்கள். சிறு தெய்வங்கள் இவைகளைத் தனிக்கணக்கில் சேர்க்க aேiண்டியதுதான். - முன்னாளில் ஜமீனாக இருந்த கிராம்ம் என்பதால் ஊரில் பல பிரச்னைகள் இருந்தன. கட்சிகள், அரசியல், சண்டை. சச்சரவுகள், எல்லாமே எங்கு எப்படி ஆரம்பித்தாலும், கடைசியாகச் சாதியில் வந்து நிற்பதும் வழக்கமாகி இருந்தது. பள்ளிக்கூடமும் இதற்கு விதிவிலக்காக இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஆசிரியர்கள் நியமனம் நிர்வாகம் என்றவற்றின் அளவில் இருந்த சாதிச் சண்டை இப்போதெல்லாம் படிக்கிற பிள்ளைகள் வரை வந்திருந் தது. அப்படி வருவதை யாராலும் தவிர்க்க முடியாது. போயிருந்தது. * > * தான் அந்தப் பள்ளிகூடத்தில் தமிழாசிரியராக வேலை கேட்டு மனுச்செய்து இண்டர்வ்யூவுக்கு அழைக்கப்பட்ட போது தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும். சுதர்சனன் இன்னும் மறத்துவிடவில்லை. நிர்வாகி, தலைமையாசிரியர், பன்னி நிர்வாகக் குழு உறுப்பினர்களில், முக்கியமான ஒருவர் ஆகிய மூவர்தான் அந்த இண்டர்வ்யூ. வில் அமர்ந்திருந்தனர்.இண்டர்வ்யூவுக்குமுன்பே இன்னின்ன கேள்விகளைக் கேட்பார்கள் என்று இம்பகமான வட்டாரத் திலிருந்து சுதர்சனனுக்குத் தகவல்கள் தெரிந்திருந்ததால் அவன் அந்தக் கேள்விகளை எதிர் கொள்ளத் தயாராயிருந் தான். முதலில் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்... "படிக்கிற காலத்திலேயே கலவரங்கள், அரசியல் போராட்டங்கள், இயக்கங்கள் எதிலாவது தொடர்பு உண்டா?” - . . . . . - 'இல்லை- என்று அவன் மணமறிந்து பொய் சொல் லித்தான் ஆக வேண்டியிருந்தது, . இது ஒரு.கோ.எஜுகேஷன் பள்ளிக்கூடம். நீங்களோ, .திருமணமாகாதவர், ஆகவே உம்முடைய தன்னடத்தைக்கு