பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பொய்ம் முகங்கள் உத்தர் வாதங்கூறி இரண்டு பிரமுகர்களிடமிருந்து சர்டிபி கேட் வாங்கித்தர முடியுமா?’’ - - முடியும் வாங்கித்தருகிறேன்'- என்று இண்டர்வ்’ யூவின் போது ஒப்புக் கொண்டு அப்புறம் உள்ளூர் எம்.எல். ஏ. ஒருவரிடமும் பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர் ஒருவரிடமும் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்திருந்தான் சுதர்சனன். சொல்லப் போனால் அவனுக்கு சர்டிபிகேட் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த அந்த இருவரையும் விட அவனுடைய நடத்தை மிகவும் சுத்தமானதாகவே இருந்தது. ஆனாலும் தேவைக்காக அவர்களிடம் உத்தர வாதம் வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. இவையெல் லாம் நினைவு வரவே தனக்குப் பல விதத்தில் தொல்லை கொடுக்கும் அந்தத் தலைமையாசிரியரை எதிர்க்கத் தொடங்கி அது எங்கே உள்ளுர் அரசியலில் போய்க் கலந்து: விடுமோ என்ற தயக்கமும் முன்னெச்சரிக்கையும் சுதா சனனின் மனத்தில் இருந்தன. அப்படி ஆகிவிட்டால் பள்ளி நிர்வாகியோ, தலைமை ஆசிரியரோ அதைக் காரணம் காட்டியே தன்மேல் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதை யும்.அவன் புரிந்து கொண்டிருந்தான். - . ஊர்க்காரர்களும், சக ஆசிரியர்களும் சுதர்சனனுக்கு, முன்பாக அதே பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராக இருந்த ஒர் இளைஞரின் கசப்பான அனுபவங்களைப் பற்றிக் கதை, கதையாகச் சொல்லியிருந்தனர். எந்தச் சூழ்நிலையில் அந்த முந்திய தமிழாசிரியர் ஒரே சமயத்தில் வேலையை விட்டும் ஊரை விட்டும் துரத்தப்பட்டார் என்பது உட்பட எல்லா விவரங்களையும் நண்பர்கள் கதைகதையாக விவரித்திருந்: தார்கள். ஒர் இந்திய கிராமம் என்பது நகரத்தைவிட மனப் பான்மையிலும் சிறியது. பரப்பிலும் சிறியது. வசதிகளிலும் சிறியது, நாவலாசிரியர்களும் நகரங்களில் வெறுப்புக். கொண்ட தீவிர லட்சியவாதிகளும் வர்ணிப்பதுபோல அது சொர்க்க் பூமியில்லை. அங்கே சின்ன விஷயங்களுக்காகப்.