பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 35・ பெரிய சண்டைகள் நடக்கும். பெரிய விஷயங்களுக்குச் சின்ன எழுச்சிகள் கூட இராது. முஸ்லீம் தெரு வழியாகத் தைபூச ஊர்வலமும், மேளமும் போகலாமா கூடாதா, என்பது ஆதர்சபுரத்தில் கடந்த கால் நூற்றாண்டுக் கால மாக இன்னும் முடிவாகாத ஒரு சர்ச்சையாகவே இருந்துவரு கிறது. பெருமாள் கோவில் யானைக்கு எந்த நாமம் போடு வது என்பதும் ஐம்பது ஆண்டுகளாக முடிவு பெறாத சர்ச்சையாக இருந்து வருகிறது. கிராமத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு குணசித்திரம், ஒவ்வொருவருக்கும் சொந்த பலங்களும் பலவீனங்களும், வீம்புகளும், வீறாப்பு களும் உண்டு. விட்டுக் கொடுக்கும் சுபாவம் குறைவாகவும் முரண்டுகள் அதிகமாகவும் உள்ள மனிதர்கள் நிறைய இருப்பது இந்திய கிராமங்களைப் பொறுத்தவரை சகஜ மான நிலை ஆதர்சபுர மும் அதற்கு விதிவிலக்காக இல்லை என்பது அங்கு வந்த சில நாட்களிலேயே சுதர்சனனுக்குப் புரிந்திருந்தது. - இவ்வளவு ஆதர்சமில்லாத தன்மைகள் நிறைந்த ஓர் :ஊருக்கு ஆதர்சபுரம் என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்றுகூட அவன் அடிக்கடி நினைப்பதுண்டு. உண்மையில் அந்த ஊரின் பழைய பெயர் மலையப்ப நாய்க்கம்பட்டி என்பதுதான். ஜமீன் குடும்பத்தில் இங்கிலாந்துக்குப் போய்ப் பாரிஸ்டருக்குப் படிக்கும் எண்ணத்துடன் சில மாதங்கள் தங்கிவிட்டு அது இயலாமல் திரும்பிய பழைய இளம் ஜமீன்தார் ஒருவர் பத்தாம்பசவிக் கட்டிடமான அரண்மனை பிடிக்காமல் ஊரின் வடக்குப் பகுதியில் மலை யடிவாரத்தில் மேல் நாட்டுப் பாணியிலான புது பங்களா ஒன்றும் சில குடியிருப்புகளும் கட்டி அப்பகுதிக்கு ஆதர்ச :புரம் என்று பெயரிட்டார். அதன்பின் பள்ளிக்கூடம், .பி. டபிள்யூ. டி. இன் ஸ்பெக்ஷன் பங்களா, ஃபாரஸ்ட் ரேஞ்சு அலுவலகம், பாங்கு, ஸ்ப் டிரெஷரி, எல்லாம் அந்த புதுப் பகுதியிலேயே வளரத் தொடங்கின. பழைய ஊரை விடப் புதுப்பகுதி பெரிதாகி அதன் புதிய பெயரான் ஆதர்ச