பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 27 கவிதை எழுதுகிறார்-என்பது இன்னும் ஒரு கவர்ச்சி 'யாகவே இருந்தது. அதை ஒட்டி மற்ற ஆசிரியர்கள் மேல் இருந்ததைவிட அதிக மதிப்பும், ஓர் இனிய மயக்கமும் இளவழகன் மேல் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக அந்தப் பள்ளியின் மேல் வகுப்புக்களில் படிக்கும் வயதுவந்த மாணவிகளில் சிலருக்கு அவருடைய கவிதை எழுதும் திறமையிலே ஒரு மையலே ஏற்பட்டிருத்தது. 'நீங்க எழுதின கவிதைப் புஸ்தகத்தை எங்களுக்குக் காண்பிக்கக் கூடாதா சார்?’ என்று மாணவர்கள் வற்புறுத் தியதற்குப் பின் ஒரு நாள் அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து எஸ். எஸ். எல். சி. வகுப்பில் காண்பித்தார் இளவழகன். அவருடைய போதாத காலமோ என்னவோ இன்னொரு வினோதமான விருப்பமும் அந்தச் சமயத்தில் அவருக்கு உண்டாயிற்று. அந்த விருப்பத்தை அப்போது பகிரங்கமாகவே வகுப்பில் அறிவித்தார் அவர்: 'இப்போது இந்த வகுப்பில் ஒரே ஒரு கவிதைத் தொகுதியை மட்டும் யாராவது ஒருவருக்கு நான் அன்பளிப் பாகக் கொடுக்க விரும்புகிறேன். உங்களில் யார் அந்த அன் பளிப்பைப் பெற முடியும் என்பதற்காக ஒரு சிறிய பரீட்சை உண்டு. நான் கேட்கிற ஒரு கேள்விக்கு எடுத்த எடுப்பில் யார் சரியான பதிலைச் சொல்கிறீர்களோ அவர்களுக்கு என் கவிதைத் தொகுதியில் ஒன்றைத் தருவேன். நான் பத்து எண்ணி முடிப்பதற்குள் யார் பதில் சொல்கிறீர்களோ அவர் களுக்குப் பரிசு’’ என்று அறிவித்துவிட்டுத் தமிழில் எட்டுத் தொகை நூல்களின் பெயர்கள் என்ன?’ என்பதாக ஒரு கேள்வியையும் கேட்டார். . ベ - . . . அவர் கேள்வியைக் கேட்டு முடித்துவிட்டுப் பத்து எண்ணுவதற்காக ஒன்று, இரண்டு. மூன்று என்று தொடங் குவதற்குள்ளேயே, - 'நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்துங்கவியே அகம்புறமென் றித்திறத்த எட்டுத் த்ொகை .