2き - பொய்ம் முகங்கள். என்ற பாட்டை அப்படியே அடிபிறழாமல்ஒப்பித்து முடித்து விட்டாள் ஒரு மாணவி. அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார் தமிழாசிரியர் இளவழகன். அங்கிருந்த மாணவி களிலேயே அவள்தான் பெரியவள். வளர்ந்தவள். அழகான வளும்கூட. - - சபாஷ்! உன் பெயர் என்ன?” "நாச்சியார் சார்,' "உங்கப்பா பேரு?'
- பலராம் நாயுடு. ’’
போ ைமுழுப் பரீட்சையிலே தமிழிலே உனக்கு என்ன 显nfr斤函?””、 'நூற்றுக்குத் தொண்ணுரத்திரண்டு சார்!’: - 'தமிழறிவுள்ள நாச்சியாருக்கு அன்புடன் என்று எழுதித் தன் கையொப்பத்தை இட்டு அந்தக் கவிதைத் தொகுதியை அவளுக்குக் கொடுத்தார் இளவழகன். அவள் புத்தகத்தை வந்து வாங்கும்போது அவள் கையில் கொடுத்துவிட்டுத் தாமே கைகளைத் தட்டி வகுப்பு முழு வதையுமே அவளைப் பாராட்டிக் கரகோஷம் செய்யுமாறு துாண்டி ஜாடை காட்டினார் அவர். வகுப்பும் அவருடன் சேர்ந்து கொண்டு பரிசு பெற்ற மாணவியைப் பாராட்டி உற்சர்கமாகக் கரகோஷம் செய்தது. - - - - ஒரு வாரம் கழித்து ஒருநாள் பிற்பகலில் தமிழாசிரியர் இளவழகன் பகல் இடைவேளைக்குப் பின் பள்ளிக்கு வந்ததுமே தலைமையாசிரியர் அவசரமாகக் கூப்பிடுவதாகப் ப்யூன் வந்து தெரிவித்தான். இளவழகன் தலைமை யாசிரியர் அறைக்கு விரைந்தார். அங்கே தலைமையாசிரி யருடன் அந்நியமான வேறொருவரும் இருந்தார். பருத்த சரீரமும் குண்டு முகமும் பெரிய மீசையுமாக இருந்த அந்த மூன்றாம் மனிதரை, "இவர்தான் மிஸ்டர் பலராம்நாயுடு. நம்ம ஸ்கூல் நிர்வாக போர்டு மெம்பர்' என்று அறிமுகப் படுத்தினார் தலைமையாசிரியர். பலராம் நாயுடுவை.