பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பொய்ம் முகங்கள் எஸ்டேட் அதிபர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. .திருவள்ளுவர் மன்றத்தின் நிரந்தரப் பாதுகாவலராக ஜமீன் குடும்பத்தின் இளைய வாரிசுகளில் மூத்தவரான ஜகந்நாத நாயுடு இருந்து வந்தார், பள்ளிக்கூட நிர்வாகக் குழுவின் தலைவரும் அவர்தான். ராஜாப்பட்டம், ஜபர்தஸ்துகள் . எல்லாம் சட்டப்படி பறிக்கப்பட்டு விட்டாலும் ஊர் ஜனங், களில் பழைய தலைமுறை மனப்பான்மை உள்ள சிலர் இன்னும் இளையராஜா ஜகந்நாதபூபதி என்றே அவரை அழைத்து வந்தனர். அழைப்பிதழ்களிலும் அப்படியே அச்சிட்டனர். நேரில் பேசும் போதும் "இளையராஜா அப்படி நினைப்பதாயிருந்தால்’’-என்பது போல் பேசினர். இளையராஜாவை நிரந்தரப் பாதுகாவலராகக் கொண்ட திருவள்ளுவர் மன்றத்தில் அந்த வருடத் தலைவராக ஃபாக்ஸ் ஹில்ஸ் டீ. எஸ்டேட் அதிபர் அருள்நெறி ஆனந்த மூர்த்தி இருந்து வந்தார். ஆனந்தமூர்த்தி ரெட்டியாருக்கு அருள் நெறிப்பட்டம் அவருடைய அறுபதாண்டு விழாவின் போது சமயத் தலைவர் ஒருவரால் வழங்கப்பட்டது. அதிலிருந்து அவருடைய பெயரை அருள்நெறி ஆனந்த .மூர்த்தி என்றே எல்லோரும் சொல்லவும் எழுதவும் தொடங்கி விட்டார்கள். * * . . . ... ' அவருடைய எஸ்டேட் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றின்போது அவர் வீட்டுக்கு எதிர்த்த வரிசைச் சுவரில் எழுதப்பட்ட, "இருள்நெறி ஈனமூர்த்தியே தொழி லாளிகளைப் பட்டினி போடாதே'-என்ற எழுத்துக்கள் இன்னும் அழிக்கப்படாமலிருக்கின்றன. அந்த ஆனந்த மூர்த்தியின் முன்னிலையில் இளையராஜா ஜகந்நாத பூபதி தலைமையில் பேச நேரிட்டபோது சுதர்சனன், இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்' என்ற குறளுக்கு விளக்கம் தந்தான். இரப்போரும் ஏற்போருமாக உள்ள சமுதாய அமைப்பு மாற வேண்டும் என்கிறார் வள்ளுவர். உலகம் சமதர்ம நெறியில் பொதுவுடமைப் பூங்காவாக மலரும்