நா. பார்த்தசாரதி - 35 அாலம் வெகு தொலைவில் இல்லை என்பதை வள்ளுவரே ஆயுரிந்து கொண்ட வளமையை எப்படி வியப்பது? . 'அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை' - - என்ற குறள் மூலம் உழைக்கும் வர்க்கத்தை அழவைத்து உண்டு கொழுக்கும் வர்க்கம் உருப்படாது என்கிறார். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணிரன்றே - - . - , * செல்வத்தைத் தேய்க்கும்படை’’ என்ற குறள்மூலம் உழைப்போர் கண்ணிர் அன்னார்தம் இரத்தத்தை உறிஞ்சுவோரை அழித்தே தீரும் என்கிறார்." என்பதுபோல் மனம் குமுறிப் பேசிவிட்டான். பலர் முகத் தைச் சுளித்தனர். ஆதர்சபுரம்'பெருமக்களில் பலர் எதிர் பாராத பேச்சு இது. இளைஞர்களும், தொழிலாளிகளும் பல காரணங்களால் திருவள்ளுவர் மன்றத்தின் பக்கம் அதிகமாக வருவதில்லை. திருவள்ளுவர் மன்றத்தின் பக்கம் அதிகமாக வருகிற வழக்கமுள்ள பலர் இப்படிப் பேச்சுக் களுக்குப் பழக்கப்படாதவர்கள். '1 12வது குறளிலே நாயனார் அருளிச் செய்திருக்கும் பேருண்மை என்னவென் றால்..." என்ற பாணியிலேயே திருக்குறளுக்குச் சுமுக விளக்கம் கேட்டுப் பழகிய இடத்தில் திருவள்ளுவரைப் புரட்சிக்காரராகச் சித்திரிக்க முயன்ற ஒரு புதிய இளைய தமிழாசிரியரின் குரல் பலரை மிரட்டியே விட்டது. தலைவர் முடிவுரையில் ஜாடைமாடையாகச் சுதர் சனனின் பேச்சு மறுக்கப்பட்டது. கண்டிக்கப்பட்டது. கிண்டல் செய்யப்பட்டது. - - - "நீங்க டிரேட் யூனியன் லீடர் மாதிரியில்லே வள்ளு வரை: அணுகறிங்க?" என்று விழா முடிந்து வரும் போது நெறி ஆனந்தமூர்த்தியே சுதர்சனனைக் கிண்டல் செய்தார். - -
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/37
Appearance