பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பொய்ம் முகங்கள் "நான் தப்பா ஒண்ணும் பேசிடலையே?கன்று சுதர்சனன் கேட்ட கேள்விக்கு, "நீங்க சரியா என்ன பேசனிங்கன்னுதான் எனக்குத் தெரியலே?- என்று முகத்தை முறித்தாற் போலவே. எதிர்த்து வினாவினார் ஆனந்தமூர்த்தி. அப்போது ஜமீன் இளையராஜாவும் கூட இருந்தார். ஆனந்தமூர்த்தி கூறிய தைக் கேட்டு அவரும் நகைத்தார். திருவள்ளுவரை வசதி: யுள்ளவர்களின் தத்துவப் பாதுகாவலராக நினைக்கும் மனப்பான்மை உள்ளவர்களே நிறைந்த அந்தக் கூட்டத்தில் தான் பேசியிருக்க வேண்டாமோ என்று எண்ணினான் சுதர்சனன். அதிலிருந்து அவன் திருவள்ளுவர் மன்றத்துப் பக்கம் போவது நின்று போயிற்று. வசதியுள்ளவர்களும், புளிச்சேப்பக்காரர்களும் எந்தப் பெயரில் மன்றம் நடத்தி னாலும் அது ரெக்ரியேஷன் கிளப்பாகத்தான் இருக்கும். என்பது அன்று அவனுக்கப் புரிந்தது. ஆதர்சபுரத்தின் குறுகிய மனப்பான்மைகளுக்குச் சிறிதும் ஒத்துவராத, அவனது பரந்த மனப்பான்மையும் உலகளாவிய பார்வை யும் அவனுக்கு இடையூறுகளாகப் பலரால் நினைக்கப் பட்டன. அவை அவனை விரைவிலேயே பிரச்னைக்குரிய சர்ச்சைக்குரிய மனிதனாக்கி விட்டன. அவன் தாங்கள் நினைத்தபடி இல்லை என்பதனால் பலருக்கு அவன் மேல் கடுமையான் கோபதாபங்கள் ஏற்பட்டன. சிறிய ஊர்களில், பஜனைசமாஜமோ. வள்ளுவர் மன்றமோ, வாசக. சாலையோ எதுவானாலும் அது வேண்டியவர் வேண்டா தவர் ஆள் சேர்க்கும் இயக்கம்தான். விருப்பு வெறுப்புக்கள். வேறு காரணங்களால் ஏற்பட்ட விரோதங்கள் நடபுக்களை வைத்தே அங்கெல்லாம் ஆட்கள் ஒன்று சேருவார்கள் அல்லது விலகுவார்கள். ஆதர்சபுரமும் இதற்கு விதி விலக் கில்லை, கட்சி சேர்க்கும் மனப்பான்மை அங்கும் இருந்தது. வள்ளுவர் மன்றத்தில் அருள்நெறி ஆனந்த மூர்த்தி. எல்லாமாக இருந்ததனால் அவரை ஒட்டிய அந்தஸ்திலேயே அதில் உறுப்பினர்களும் சேர்ந்திருந்தார்கள். ஊரிலுள்ள