38 பொய்ம் முகங்கள் படிக்க. எல்லாமாகச் சேர்ந்து கிளப்புகள் என்று எப்படி 'யாவது சில அமைப்புகள் ஏற்பட்டுவிடும். ஆதர்சபுரத் திலும் அப்படி ஒரு கிளப் இருந்தது. தலைமையாசிரி யருடைய மனத்தில் தன்னை ஒரு பெரிய வில்லனாகச் சித்திரிப்பதற்கு அருள்நெறி ஆனந்தமூர்த்தி பாடுபட்டி ருக்க வேண்டும் என்று சுதர்சனனால் புரிந்து கொள்ள முடிந்தது. உண்மையிலும் அதுதான் நடந்திருந்தது. ஆனந்தமூர்த்தி தலைமையாசிரியர் வாசுதேவனிடம் நன்றாகக் கோள் மூட்டியிருந்தார். . . - வானொலி நிலையத்திலிருந்து தன் பெயருக்கு வந்திருந்த உறையைத் தெரிந்தே பிரித்துப் படித்துவிட்டுத் தெரியாமல் பிரித்துவிட்டதாகச் சொல்லியனுப்பியிருந்த தலைமையாசிரியரின் அற்பத்தனத்தை நினைத்தபோது அந்த நினைப்பின் தொடர்பாகச் சுதர்சனனுக்கு இவ்வள வும் ஞாபகம் வந்தன. -. * . எதிர்நீச்சலிடுவது சிரமமாகத்தான் இருக்கும் என்றா அலும் அவன் அதைத் தவிர்க்க விரும்பவில்லை. எதிர்நீச்ச விடாமல் வாழத் தனக்குத் தெரியாது என்பது அவன். முடிவு. . மாலையில் பள்ளி முடிவதற்கான மணி அடித்தது. பள்ளி கலைந்ததும் அவன் நேரே தலைமையாசிரியரு டைய அறைக்குச் சென்றான். : . - உள்ளே யாரோ பேசிக் கொண்டிருப்பதாக வாசலி, லேயே ரைட்டர் அவனைத் தடுத்தார். . -
- பரவாயில்லை! உள்ளே பேசிக் கொண்டிருக்கிறவங்க வர்ர வரை நான் காத்திருக்க முடியும். எனக்கு எப்படியும் அவரைப் பார்த்தாகணும்: என்று பொறுமையாக வெளியே நின்று கொண்டான் சுதர்சனன்.
அவன் முக மாறுதலையும், ஓரளவு கோபமாக அவன் வந்திருப்பதையும் ர்ைட்டர் கவனித்திருந்தார். அதனால் தலைமையாசிரியருக்கும் அவனுக்கும் வார்த்தைகள்