பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பொய்ம் முகங்கள். பகல் பூரா உட்கார்ந்துதானே கிளாஸ் நடத்தறோம். இப்பக் கொஞ்ச நேரம் நிற்கத்தான் நிற்போமே: அதனாலே என்ன சார் குறைஞ்சிடப் போகுது?" இதற்குள் ரைட்டரின் பேரைச் சொல்லி யாரோ தேடிக் கொண்டு வரவே அவர் தன்னைத் தேடி வந்தவரைக். கவனிக்கப் போய்விட்டார். - . தலைமையாசிரியர் அறைக்குள் பேசிக் கொண்டிருந். தவர்கள் வெளியே வந்தார்கள். வகுப்புக்களுக்கான மர பெஞ்சுகள், நாற்காவிகள் செய்வது விஷயமாக உள்ளூர் மரக் கடைக்காரர் ஒருவரும் அவருக்குச் சிபாரிசாக வந்த ஸ்கூல் போர்டைச் சேர்ந்த ஒரு பெரிய மனிதரும்தான் உள்ளே அதுவரை பேசிக் கொண்டிருந்தவர்கள் என்று அவர்கள் வெளியே வந்ததும் தெரிந்தது. அவர்கள் வெளி யேறியதும் தலைமையாசிரியரே, "வெளியிலே வேற. யாராவது காத்திருக்காங்களாப்பா?’ என்று குரல் கொடுத் தார். தலைமையாசிரியர் அறை வாசலில் பள்ளிப் பெயர் பொறித்த பித்தளை வில்லையோடு கூடிய டவாலியுடன் நின்று கொண்டிருந்த பியூன் நாதமுனி, 'புது தமிழ்ப் பண்டிட் உங்களைப் பார்க்கணும்னு நிற்கிறாரு சார் - என்று பதிலுக்குக் குரல் கொடுத்தபடி உள்ளே சென்றான், பின்பு மறுபடியும் திரும்ப் வெளியே வந்து, வரச் சொல் றாருங்க' என்று சுதர்சனனை நோக்கிச் சொன்னான் ப்யூன் நாதமுனி. சுதர்சனன் தலைமையாசிரியரின் அறைக்குள் நுழைந்து எதிரே இருந்த நாற்காலியில் அவக் "உட்காருங்கள்' என்று. சொல்கிற வரையோ சொல்ல வேண்டும் என்றோ காத்தி, ராமல் தானே உட்கார்ந்துவிட்டான். - என்ன விஷயமா வந்தீங்களோ அதைச் சொல் லுங்கோ'... - - போஸ்ட்லே எனக்குவர்ர லெட்டரை எல்லாம் நீங்க. பிரிச்சுப் படிச்சப்புறம் அனுப்பlங்க. அது முறையில்லே. நாகரிகமும் இல்லே.” w -