உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 41 "வேனும்னு எந்த லெட்டரையும் நான் பிரிக்கிற தில்லே. அவசரத்திலே ஸ்கூல் லெட்டரோன்னு சிலதைப் பிரிச்சுடறது உண்டு. அவ்வளவுதான்.' "மன்னிக்கணும்; முதல்ல நானும் அப்படித்தான் சார் தினைச்சேன். ஆனால் வர வர நீங்க வேணும்னே பிரிக்கறீங் களோங்கிற சந்தேகம் எனக்கு வருது.' - அவ்வளவு சந்தேகம் இருந்தா ஸ்கூல் அட்ரஸ்-க்கு லெட்டரே போடச் சொல்லாதீங்கோ இனிமே உங்க வீட்டு அட்ரஸுக்குப் போடச் சொல்லுங்கோ...' மிகவும் நிதானத்துடனும், ஆத்திரத்தில் உணர்ச்சி வசப்பட்டு விடாமலும், தன்னடக்கத்துடனுயே பேசிக் கொண்டிருந்த் .சுதர்சனன் இதைக் கேட்டுப் பொறுமை இழந்தான். கடிதங் களைப் பிரித்துப் படித்து விட்டு அனுப்புகிறீர்களே, ..இப்படிச் செய்யலாமா?-என்று கேட்டால் இந்த விலாசத்துக்கு இனிமேல் கடிதங்களே எழுதச் சொல்லா தீர்கள் என்று அவர் பதில் கூறியது அவனுக்கு எரிச்ச இாட்டியது. . - . அப்போ நீங்க சொல்கிற மாதிரியே ஒரு சர்க்குவர் எழுதி அனுப்பிடுங்க சார்!.. இனிமேலாவது தெரிஞ்சுக் கிறோம்...' - ; - . நீங்க இத்தனை திமிராப் பேசப்படாது. யாரிட்டப் பேசறோம்கிறது உங்களுக்கு ஞாபகம் இருக்கணும் மிஸ்டர் .சுதர்சனன்! யூ ஆர் டாக்கிங் வித் யுவர் ஹெட் மாஸ்டர்...' . - "தெரியுது சார்! நான் ஒண்னுந் தப்பாப் பேசிடலை. வேலை பார்க்கிற ஆசிரியர்களுக்கு லெட்டர் போடப் பட்ாதுங்கிற மாதிரி எங்கேயும் நானோ எனக்குத் தெரிஞ்ச வங்களோ இதுவரை கேள்விப்பட்டதில்லே. இப்பத்தான் முதல் முதலாகக் கேள்விப்படறேன். இவ்வளவு முக்கிங் மான விவரத்தைச் சர்க்குலரா. அனுப்பினாத்தானே சார் எல்லோருக்கும் தெரியும்? அதான் சர்க்குலர் அனுப்பிடுங் ஆன்னு சொன்னேன்...' . . . . . . . . . . .