உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பொய்ம் முகங்கள் 'ரேடியோ என்கிற சாதனம் அப்படி ஒன்றும் கல்வி இலாகாவுக்கு விரோதமான விஷயமில்லே. ரேடியோ வுக்குப் பேசப் போறப்ப நான் லீவு 'அப்ளை' பண்ணு வேன். லிவு லெட்டர்லியே எதுக்காக லிவு கேட்கிறேன்னும் எழுதுவேன். பொய்யா எதுவும் காரணம் எழுதமாட் டேன். கவலைப்படாதீங்க...' - நான் உமக்கு லீவு சாங்ஷன் பண்ணாமல் போயிட்டா என்ன பண்ணுவீர்?" - - - - 'ரேடியோவில் கல்வி ஒலிபரப்பிலே நடுத்தரப் பள்ளி மாணவர்களுக்கு-என்ற பிரிவிலே கல்வி சம்பந்த ம்ாகப் பேசத்தான் அவங்க என்னைக் கூப்பிடறாங்க. அதுக்கே லீவு தரமாட்டேன்னு நீங்க எப்பிடி சார் மறுக்க முடியும்: - - - - "நான் மறுக்கக் கூடாதுன்னு சொல்ல நீர் யார்?' 'விதண்டாவாதம் பேசினால் அதுக்கு முடிவே இல்லே. வாதத்துக்குத்தான் முடிவு உண்டு. "என்னை விதாண்டாவாதக்காரன் என்கிறீரா?" சுதர்சனன் அவருக்குட் பதில் சொல்வதை நிறுத்திக் கொண்டான். அவருடைய மனப்போக்கை அவனால் விளங்கிக் கொள்ளவும் முடிந்தது. அவர் தன்னை விரோதி யாகவும். முரடனாகவும், புரட்சிக்காரனாகவும் நினைத்து வெறுக்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. பழைய சுய மரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவன், கருப்புச் சட்டைக் காரன் என்று தன்னைப் பற்றி யாரிடமோ கேள்விப்பட்ட விவரங்களும், வள்ளுவர் மன்றத்தில் முன்பு தான் பேசிய பேச்சும் சேர்ந்து தலைமையாசிரியரை ப்ரஜிடிஸ்' செய் திருப்பதாகத் தோன்றியது. தன்னைப் பற்றிக் கேள்விப் பட்டதிலிருந்து அவர் என்ன புரிந்து கொண்டாரோ அதற்குப்பின் தன்னை நேரில் பார்த்துப் பழகிப் புரிந்து கொள்ள அவர் தயாராயில்லை என்றும் தெரிந்தது. தலைமையாசிரியருக்கு எதிராகச் சாதி ரீதியான எதையும்