உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. - அந்த மெமோ வந்து சேர்ந்தபோது சுதர்சனன் 'நான்காவது படிவம் டி பிரிவு வகுப்பில் தமிழ்ச் செய்யுள் நடத்திக் கொண்டிருந்தான். பியூன் நாதமுனி வகுப்பிற்குள் துழைந்து இரண்டு நிமிஷங்கள் ஆனபின்பே தான் நடத்திக் கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு 'மெமோ வைக் கையெழுத்திட்டு வாங்கினான் அவன். அதுவரை பியூன் நடு: வகுப்பில் அவனுடைய மேஜையருகே நின்று காத்திருக்க வேண்டியதாகத்தான் ஆயிற்று. வாங்கிய பின்பும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தி அவன் உடனே பிரித்துப்படித்து விடவில்லை. அலட்சியமாக மேஜைமேல் போட்டுவிட்டு: மேலே தொடர்ந்து பாடத்தை நடத்தத் தொடங்கியிருந்: தான். பியூன் கொண்டு வந்து கொடுத்தது எல்லா வகுப்புக் களுக்குமான சுற்றறிக்கை எதுவுமில்லை என்பது அவன் சுதர்சனனிடம் அதைக் கொடுத்த தோரணையிலிருந்தே. விளங்கிவிட்டது. உறையிட்டு ஒட்டப்பட்டு மேலே தன் பெயரும் எழுதப்பட்டிருந்ததிலிருந்தே முந்தியதினம் தலைமையாசிரியர் தனக்கு அனுப்பப் போவதாக மிரட்டி. யிருந்த மெமோ தான் அது என்பதை அவன் புரிந்து. கொள்ள முடிந்திருந்தது. . - அவன் இளமையில் சார்ந்திருந்த இயக்கங்கள் அஞ்சா மையையும், துணிவையும் அவனுடைய இயல்புகள் ஆக்கி யிருந்தன. அந்த இயக்கங்களில் இருந்ததால் தான் நிரந்தர மாகப் பெற்ற லாபங்கள் என்று இன்றும் அவன் அவற்றைத், தான் கருதினான். அந்த இயக்கங்கள் கண்மூடித்தனமாகக் கற்பித்திருந்த ஆழமான விருப்பு வெறுப்புக்கள் இப்போது, அவனுள் இல்லை. காரணகாரியச் சிந்தனையின் வளர்ச்சி * குருட்டுத்தனமான விருப்பு வெறுப்புக்களைப் படிப்படியாக: மாற்றிவிட்டிருந்தது. குருட்டுத்தனமான கற்பிதங்களி லேயே திளைத்து நிற்பது அறிவு வளர்ச்சியை எவ்வளவு: தாரம் தடுத்துவிடும் என்பதைக் கடந்தகால அநுபவங்களில் இருந்து அவன் புரிந்து கொண்டிருந்தான்.