霍5 பொய்ம் முகங்கள் சிவராஜ் ஒரு தனியான குணசித்திரமாக விளங்கினார். கஞ்சப்பிரபுக்களான பல ஆசிரியர்கள் சிவராஜுக்குச் சூட்டிய பட்டப்பெயர் அடைமொழி கை ரொம்ப ஒட்டை என்பது ஆகும். . அந்தக் காலை வேளையில் ஆசிரியர் ஒய்வறை ஏறக் குறையக் கூட்டமில்லாமல் இருந்தது. இரண்டாவது பீரியடு தொடங்கும் மணியடித்துப் பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்புக்குப் போயிருந்தார்கள். ஒய்வறையில் டிராயிங் மாஸ்டர் சிவராஜைத் தவிர நெசவு ஆசிரியர் தனசேகரன், தமிழாசிரியர் சுத்ர்சனன், ஆகிய மூவரே இருந்தனர். சயின்ஸ் அளிஸ்டெண்டுகளில் இருவர் மூவர் லேபரேட்டரி ஹாலை ஒட்டி இருந்த அறையில்ே இருந்து கொள்வார்கள். அவர்கள் ஸ்டாஃப் ரூமுக்குப் பெரும்பாலும் வரமாட்டார் கள். இன்னும் சில ஆசிரியர்கள் பள்ளி நூல்நிலைய ஹாலில் இருப்பதுண்டு. வீவிங் டீச்சராகிய தனசேகரன் கூட வீவிங் ஹாலில்தான் இருப்பது வழக்கம். ஆனால் காலையில் மட்டும் முதல் பீரியடு தொடங்கி இரண்டாம் பாடவேளை ஆரம்பமாகிற நேரத்துக்குள் சிறிது நேரம் தினசரிப் பேப்பர் படிப்பதற்காக ஆசிரியர்கள் ஒய்வறைக்கு வர் வந்து போவார். தனசேகரன் காபி, டீ எதுவும் குடிக்காதவர். அதனால் சிவராஜுக்குக் காபி அருந்தும் துணையாகச் சிக்கியது சுதர்சனன்தான். காபிக்காகப் பையன் பிளாஸ்க் குடன் புறப்பட்டுச் சென்றபின், - - * - "காலங்கார்த்தாலே போரடிக்குது. ஒரு காபியாவது குடிச்சுப் பார்க்கலாம்னுதான் வாங்கியாரச் சொன்னேன்." என்றார் சிவராஜ். * . . . . . . . . "போரடிக்காட்டித்தான் என்ன? நீர் காபிகுடிக்காமலா இருந்துடப்போlரு காபி குடிக்கலேன்னாலே உமக்குப் போரடிக்குமே? - : -w. ... ." கரெக்ட்! ஊர்லே இருந்தப்போ ஒரு நாளைக்கு ஏழு கோபி சாப்பிடுவேன்! காபி இல்லாட்டா எனக்கு எதுவும்ே ஆஓடாது சார்' .
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/50
Appearance