உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி - 51. "என்ன யோசிக்கிறீர்? மூடிக் கச்சேரி இல்லை." "இந்தத் தடவை விட்டுடுங்க வேண்டாம். ஞாயிற் றுக்கிழமை எனக்கு வேறே வேலை இருக்கு." - - "பட்டிமன்றம் பிடிக்காட்டி விட்டுடுங்க. அங்கேயே கவியரங்கமும் இருக்கு, அதிலே கலந்துக்குங்க. கவியரங் கத்துக்குத் தமிழ்ப் பணியாரங்கள்’னு தலைப்பு. அறிவு மணி தலைமையில் தோசையைப் பற்றிச் சிங்காரமும், இட்லியைப் பற்றி இன்ப வண்ணனும், இடியாப்பத்தைப் பற்றி எழில்நாதனும், பிட்டுப் பற்றிப் புலமைநாயகமும் பாடப் போறாங்க. பொங்கலைப்பற்றி நீர் பாடுமேன்." தலைவலி போய்த் திருகுவலி வந்த மாதிரி இருந்த்து சுதர்சனனுக்கு. சமகாலப் பிரக்ஞையே இன்றி எந்தக் காதத்திலும் எந்த இடத்திலும் ஒரு நூறு ஆண்டுகள் காலம் கடந்து பின்தங்கி இறந்த காலத்தில் வாழும் இவர்களை எப்படி திகழ்காலத்துக்கு மாற்றுவது என்று எண்ணியபோது சுதர்சனனுக்கு மலைப்பாயிருந்தது. இட்லியும் தோசையும் கிடைக்காமல் பட்டினியால் சிரமப்படும் பல்லாயிரம் மக்களுக்கிடையே அவற்றைப் பற்றிப் பொழுதுபோக்குக் கவிபாடி நிற்க வெட்கப்படாத இந்த மனிதர்களை நினைத்து அருவருப்பாகக்கூட இருந்தது அவனுக்கு. கirண்டெம்பரரி மைண்ட் இல்லாத விஷயங்களைச் சகித் துக் கொள்ளக்கூட முடியாமல் சிரமப்பட்டான் அவன். பிச்சாண்டியா பிள்ளையோ தமிழ்ப் பணியாரங்கள், தமிழ்க் காய்கறிகள், தமிழ் நவதானியங்கள் என்று எல்லாவற் றோடும் தமிழைச் சேர்த்துக் கொண்டிருந்திார், பிழைப்பு நடத்த அது தேவையாயிருந்தது அவருக்கு. கடைசியாக, அவரிடமிருந்து தப்ப ஒரு வழி கிடைத்தது. சுதர்சனனுக்கு. - 'கவியரங்கம், பட்டிமன்றம் இரண்டும் அருள்நெறி ஆனந்தமூர்த்தியின் முன்னிலையில் நடைபெறும் என்று அவரே கூறியவுடன், - பணம் உண்டு. தேங்காய்