உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 55 'வாசமலர் மணத்தாள் வணிதை வனிதை தரும் அம் மணத்தை நேச விழியிரண்டால் பருகுதற்கு நெஞ்சாரக் காத்திருந்தேன் மணங்களிலே அம்மணமே அழகாகும் எம்மணமும் அம்மணத்துக் கீடில்லை'ன்னு திரும்பத் திரும்ப 'அம்மணம் என்கிற வார்த்தையை அழுத்திப் காடறாரு கேட்கிறவங்க சிரிக்கிறாங்க, ஒன்ஸ்மோர்’ போட்டு மறுபடி அதைக் கேட்கிறாங்க." 'கவியரங்கம் ரெக்கார்ட் டான்ஸ் நிலைமைக்குத் தரங் கெட்டுப் போச்சு. பட்டிமண்டபம் லாவணி நிலைமைக்குக் இழே போயிடிச்சு. இல்லாட்டி 'அம்மணம் அம்மணம்'னு ஒருத்தன் பாட அதை ரசித்து ஒன்ஸ்மோர் கேட்பாங் .களா?" "கேட்பாங்களாவது? பொம்பை ளங்களே தலையைக் குனிஞ்சாப்பில சிரிச்சிக்கிட்டு அங்கே வந்து உட்கார்ந்திருச் காங்கறேன்...”* - - 'இப்போ ஜனங்களிலே அஞ்சு சதவிகித ஆட்கள் கூட 'சிரியஸ்ஸா எதையும் கேட்கவோ, பார்க்கவோ, படிக் கவோ, யோசிக்கவோ தயாராயில்லை. இங்கே எல்லா விஷயங்களும் சமூகக் காமெடிகளாக ஆகிப் போச்சு. அது தான் காரணம்." - -சுதர்சனன் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது தலைமையாசிரியர் ஸ்டாஃப் ருமை நோக்கி வேக மாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. பியூனை அனுப் பாமல் அவரே எதற்குத் தேடி வருகிறார் என்பது புதிரா பயிருந்தது. * - - - -