உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 57 பள்ளிக்குச் சம்பந்தமில்லாத அந்நியர்களுக்கும் விரும் பத்தகாதவர்களுக்கும் உள்ளே அநுமதி மறுக்கப்பட்டிருப்ப தாக வாயிலில் நிரந்தரமாக ஒரு போர்டு எழுதி வைக்கப் பட்டிருந்தாலும் அதைக் கடுமையாக யாரும் அமுல் நடத்து. வதில்லை. கல்வி இலாகாவின் சார்பில் மாவட்டக் கல்வி அதிகாரியின் இன்ஸ்பெக்ஷன் நடக்கும்போதுதான் அநாவசி யமானவர்கள்-ப்ள்ளிக்குள்ளே அனுமதியின்றி நுழைவது தடுக்கப்படுவதுண்டு. மாணவர்கள் உள்ளே நுழைந்து முதல் பாட வேளைக்கான மணி அடித்ததுமே பள்ளியின் வெளி கேட் பூட்டப்பட்டு விடும். அப்புறம் பகல் இடைவேளைக் காக மணி அடிக்கும்போதுதான் வெளிவாயில் திறக்கப்படும். மறுபடியும் இரண்டே கால் மணிக்குப் பிற்பகல் முதல் பாட வேளை மணி அடித்ததும் வெளிவாயிலை அடைத்தால் மாலை நாலரை மணிக்குக் கடைசி மணி அடித்ததும்தான் திறப்பார்கள். அந்தக் கடுமையான வரன்முறையை இன்ஸ் பெக்ஷன் நடக்காத சாதாரண நாளிலேயே தலைமையாசிரி யர் தன்னைத் தேடிவந்த ஓர் ஆளின்மேல் பிரயோகித்ததை கண்டு சுதர்சனன் வியப்படைந்தான், பன்னீர்செல்வம் சுதர்சனனைப் பார்த்ததுமே சொல்லத் தொடங்கினான்: ' என்னண்ணே! உங்களைத் தேடி வந்தேன்னு சொன் னதுமே, உள்ளார விடமாட்டேன்னுட்டாரு! வார ஞாயித்திக்கிழம்ை அந்தத் தம்பி அன்புமணிக்குத் திருமணம் நீங்கள்தான் தலைமை வகிச்சு நடத்தித் தரணும். கலப்புக் கல்யாணம், பையன் வேளாளக்கவுண்டரு, பொண்ணு ஹரிஜன்.' சரி உள்ளே வா பன்னீர்செல்வம், உட்கார்ந்து பேசு வோமே...அவசரமா?" - "அதுதான் ஹெட்மாஸ்டரு உள்ளே வரப்பிடாதுங்க றாரே? எப்படி வர்ரது?' - . . . "அவரு கெடக்கிறாரு 曲 பாட்டுலே வா! நான் பேசிக் கிறேன். . . . . . . . . . . * .