பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 றாலொழிய ஒன்றைப் பற்றிய அல்லது ஒருவரைப் பற்றிய சத்தியம் கண்ணில் படாது. சத்திய தரிசனத்துக்கு யார் யாருடைய கண் கள் கூசுகின்றனவோ அவர்களுக்காக நாம் வருந்து வதையும் அதுதாபப்படுவதையும் தவிர வேறெதை யும் செய்வதற்கில்லை. - - பூனைகள் கண்களை மூடிக்கொள்வதால் உலகம் இருண்டு விடுவதில்லை. கண்களை மூடிக் கொள்ளாத தீரர்கள்தான் உலகைஉணர்கிறார்கள். உணர்த்துகிறார்கள். இந்தக் கதையில் வருகிற சுதர்சனனைப் போன்ற இளைஞர்கள் இன்றைய இந்திய சமூகத் துக்கு அதிக அளவிலே தேவை. அவர்கள் தொகையும், எண்ணிக்கையும் பெரு குவதைப் பார்த்து யாரும் பயப்படவோ, கவலைப் படவோ வேண்டியதில்லை. ، :80s . . ' 07 سن சுதர்சனனைப் போன்ற எதிர் நீச்சலிடும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதுதான் கவலைப்படுவதற்கும் பயப்படுவதற்கும் உரியது. ஒரு சமுதாயத்தில் அப்படி இளைஞர்கள் இருப்பது சமுதாய லாபமாகக் கணக்கிட்டுப் பெரு மைப் படவேண்டியது.ஆகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டும், அறிந்து கொண்டும். உணர்ந்து இந்த நாவலைப் படிப்பார்களானால் அவர்களுக்கு நான், மிகவும் நன்றியுடையவனாவேன். தினமணிக்கதிர் . . - 5ー11ー1989 நா. பார்த்தசாரதி