பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பொய்ம் முகங்கள் வேணாங்க...என்னாலே உங்களுக்கு எதுக்குக் கெட்ட பேரு?’’ - - - - 'அட சர்த்தான் வான்னா வாய்யா! கெட்டபேராவது ஒண்ணாவது பார்க்க வர்ரவன் தெருவிலியா நிற்பான்?" இதுலே எனக்கொண்ணும் வருத்தமில்லே அண்ணே! நீங்க எனக்காகச் சண்டை போட்டுக்காதீங்க நான் வந்த காரியம் முடிஞ்சிதுன்னாச் சரிதான், தெருவிலே பார்க்கிற, துலே எனக்கொண்ணும் மரியாதை குறைஞ்சிடாது.' 'உனக்கு மரியாதை குறையுதோ இல்லியோ, என்னை தேடி வந்தவனைத் தெருவிலே நிறுத்தி வச்சா அது எனக்கு. மரியாதைக் குறைவுதான் என்பதில் சந்தேகமில்லை. முதல்லே நீ உள்ளே வா.' - சுதர்சனன் இவ்வளவு வற்புறுத்திச் சொல்லிய பின் அவன் உள்ள்ே வந்தான். அவனையும் தன்னோடு ஆசிரியர் ஒய்வறைக்கே உடனழைத்துச் சென்று காபி வரவழைத்துப் பருகச்செய்து பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பின் அனுப்பி வைத்தான் சுதர்சனன். அந்தப் பக்கமாகக் குறுக்கும் நெடுக் கும் போய்வந்து கொண்டிருந்த தலைமையாசிரியரும் அதைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் நல்லவேளையாக சுதர்சனனைப் பார்க்க வந்த ஆளை அவன் விடைகொடுத்து: அனுப்புகிற வரை அவர் குறுக்கிடவில்லை. அப்புறம் வந்து கூப்பாடு போட்டார். "அந்த ஆளை நான் கேட்டிலேயே தடுத்து நிறுத்தினப் புறம் நீர் எப்படி உள்ளே விடலாம்?" . . . 'வந்தவன் ஒண்ணும் சிங்கமோ புவியோ இல்லே. இங்கே யாரையும் அவன் அடிச்சித் தின்னுடலே." ~ "பாலிடீஷியன்ஸ், ரெளடி எலிமெண்ட்ஸ் ஆண்டிசோஷியல் எலிமெண்ட்ஸை எல்லாம் ஸ்கூலுக்குள்ளே விடற வழக்கமில்லே...' . . . . . . . : உங்களுக்கு வேண்டியவர்களிலே இப்படி ஆட்கள் இருந்தால் சகித்துக் கொள்வதும் உங்களுக்கு வேண்டாத