உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பொய்ம் முகங்கள் சீர்திருத்தத் திருமணங்களே அதிகம் நடப்பதை அவன் கண்டு மனம் நொந்ததுண்டு. அதிகாலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள் நல்ல நேரம் பார்த்துப் புரோகிதர் சடங்கு கள் எதுவும் குறையாமல் முறையாக எல்லாவற்றையும் இரகசியமாக நடத்திக்கொண்டு பத்துமணி முதல் ஒரு மணி வரை மறுபடி சுயமரியாதைத் திருமணம் ஒன்றையும் தட்த்தும் இரட்டை வேடத்தைச் சிலரிடம் பார்த்து அவன் அதிசயித்திருந்தான். சமூகத்தை இயல்பாகத் திருந்தும்படி வாய்ப்புக்களை உண்டாக்கித் தரவேண்டுமே ஒழிய வலிந்து திருத்த முயன்றால் வேஷங்கள்தான் அதிகமாகும் என்பது இதன் பின் அவனுடைய முடிவாகியிருந்தது. என்றாலும் மறுபடி இன்று அவன் ஒரு சீர்திருத்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டிருந் தான். பழைய இயக்கத் தோழன் பன்னீர்செல்வம் வந்து சென்ற மூன்றாவது நாளோ நாலாவது நாளோ தபாலில் அந்தத் திருமண அழைப்பிதழ் கிடைத்தது. - அழைப்பிதழில் மணமக்களை வாழ்த்தி இருபது முப்பது பேர் ப்ேசுவார்கள் என்று போட்டிருந்தது. ஒரு புரோகித ரைத் தவிர்த்துவிட்டு இருபது முப்பது நவீன புரோகிதர் களிடம் மணமக்கள் சிக்கிக் கொள்வதுபோல் சுதர்சனனுக் குத் தோன்றியது. பழைய மூட்நம்பிக்கைகள் எங்கெங்கே ஒழிக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் புதிய மூட நம்பிக் கைகள் படிப்படியாக இடம்பெறுவதுபோல் நிலைமைகள் உருவாகிக்கொண்டிருந்தன. இளமையில் தீவிரமாக இருந்த அறிவு இயக்கங்களில் இப்போது அவன் சலிப்படைந்ததற்கு இந்தப் புதிய மூட் நம்பிக்கைகளை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருந்ததுதான் காரணம். மண மேன்டக்குப் பதில் சொற்பொழிவு மேடை, புரோகிதருக்குப் பதில் (பேச்சாளர்கள். அர்த்தம் புரியாத பழைய சடங்குகளுக்குப் பதில் புதிய அர்த்தம் புரியாத சடங்குகள் எல்லாம் வந்திருந்தன. - பழைய திருமணங்களைவிடப் புதிய 'திருமணத்தில் ஆடம்பரம் அதிகமாகி இருந்தது. காதும்