உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 61. காதும் வைத்தாற்போல் சொற்பொழிவு, மேடை, எதுவு. மின்றிப் பதிவு அலுவலகத்தில் போய்ப் பதிந்து திருமணம் செய்து கொள்வதே எல்லாவற்றையும்விட முற்போக்காக இருக்குமென்று அவனால் நினைக்க முடிந்தது. . . . . . நாலைந்து தினங்களுக்குப்பின் பன்னீர்செல்வம பள்ளிக்குத் தேடி வந்தது, தலைமையாசிரியர் அவனை உள்ளே விட மறுத்தது. அவருடைய ஆட்சேபணையை மீறித் தான் அவன்னப் பள்ளியினுள் அழைத்துச் சென்று பேசியது எல்லாவற்றையுமே சுதர்சனன் மறந்து போயிருந் தான். தலைமையாசிரியர் வாசுதேவனும் அவற்றையெல் லாம் மறந்திருக்கக்கூடும் என்றுதான் அவன் நினைத்தான். எதிரிகள் யாரும் எதையும் மறக்கவில்லை: தனக்குப் பாதகமான காரியங்களும், சதிவேலைகளும், இரகசிய மாகவே நடைபெற்று வருகின்றன என்பது பின்புதான் மெல்ல மெல்லத் தெரியவந்தது.அவனுக்கு, - . . என் மகனுக்குச் சரியாகப் புத்திஸ்வாதீனம் இல்லாத தைப் பயன்படுத்தி அவனை ஏமாற்றிக் கடத்திக் கொண்டு போய் யாருக்கோ கல்யாணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு நடக்கிறது. இந்தக் காரியத்துக்கு உடந்தையாக இருக்கிற அனைவர்மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்' என்று மணமகனின் தந்தை சீர்திருத்த மன்றச் செயலாளர் பன்னீர்செல்வத்திற்கு அனுப்பிய பதிவுத் தபாலின் நகல்களைச் சுதர்சனனுக்கும், தலைமைப்ாசிரியர் வாசுதேவனுக்கும், திருமணத்தில் பேசுவதற்கிருந்த பிற பேச்சாளர்களுக்கும் அனுப்பியிருந்தார். அந்தப் பதிவுத் தபாலுடன் சீர்திருத்த, மன்றத்தின்'சார்பிலே அடிச்சடிக்கப் பெற்றிருந்த அழைப்பிதழின் பிரதிகளை எப்படியோ தேடிப் பெற்று ஒவ்வொரு கடித நகலுடன் இணைத்து அனுப்பி ஆயிருந்தார் மணமகனின் தந்தை. அவர் பக்கத்து மலையடி வாரத்துக் கிராமம் ஒன்றில் பெரிய நிலச்சுவான்தார். ஆதர்சபுரம் ஜமீன் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர் என்று தெரியவந்தது.