பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பொய்ம் முகங்கள் தலைமை ஆசிரியர் வாசுதேவனுக்கு அனுப்பப்பட்டிருந்த, பதிவுத் தபால் கடிதத்தோடும் சுதர்சனன் திருமணத்துக்குத் தலைமை வகிப்பதாக அச்சிட்டிருந்த அந்தப் பத்திரிகை, ஒன்று இணைக்கப்பட்டிருக்கவே சுதர்சனன் அதில் பெரிதும் சம்பந்தப்பட்டிருப்பது அவருக்குப் புரிந்தது. எரிகிற நெருப் பில் எண்ணெய் வார்ப்பது போலிருந்தது வாசுதேவனுக்கு. - இந்த சுதர்சனன் பள்ளிக்கூடத்தின் பெயரையே கெடுத்துவிடுவான் போவிருக்கிறதே என்று தபால்களைப் பிரித்து அடுக்கிக் கொண்டு வந்து காட்டிய கிளார்க்கிடம் இரைந்தார் அவர். ஆத்திரத்தை அவரால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. - "ஏன் சார்? என்ன ஆச்சு?’ என்று கிளார்க் விசாரித்த போது அந்த விஷயத்தைப் பற்றிப் பள்ளிக் குமாஸ்தா விடம் மேற்கொண்டு விவரிக்க விரும்பாதவர்போல் மெளனம் சாதித்தார் அவர். குமாஸ்தா மூலமாக அது முன்கூட்டியே சுதர்சனனுக்கோ வேறு ஆசிரியர்களுக்கோ தெரிந்துவிடக் கூடாது என்று தமக்குத்தாமே உஷாராகி. விட்டவர்போல அவர் மெளனம் சாதித்தார். - அவரிடமிருந்து மேற்கொண்டு விஷயத்தை வரவழைப் பதற்குத் துாண்டில் போடுகிறவனைப்போல் குமாஸ்தா, "ஆமாம் சார்! புதுத் தமிழ்ப் பண்டிட் பெரிய வம்பு பிடிச்ச ஆளா இருப்பார் போலிருக்கு எதை எடுத்தாலும் எடக்குப் பண்றார். விவகாரம் பண்றார். அவரோட ஒரே தொந்தரவு, தான் சார்...' என்று ஆரம்பித்ததும் சரி! சரி! போய் வேலையைப் பாருங்க! தபால் எல்லாம் படிச்சானதும் நோட் போட்டு உம்ம டேபிளுக்கு அனுப்பறேன்" என்று உடனே அவரை அங்கிருந்து கிளப்பினார் தலைமை யாசிரியர், . . . . . . . . குமாஸ்தா தலைமையாசிரியரின் கபடமான் தன்மை. யைத் தன் மனத்திற்குள் சபித்துக் கொண்டே போக. மன மின்றி அங்கிருந்து தன் இருக்கைக்குப் பேரனான்.