68 பொய்ம் முகங்கள் திரும்ப நாலைந்து கூழைக் கும்பிடுகள் போட்டுவிட்டு வந்த தார் தலைமையாசிரியர். கவுண்டரின் கார் புறப்பட்டுப் போன பின்புதான் தலைமையாசிரியக்கு திம்மதியாக மூச்சுவிட வந்தது. . - - அப்போது சுதர்சனனுக்கும் அங்கு நடந்துகொண்டிருந்: தது எதுவும் தெரியாத காரணத்தால் ரைட்டர் மேஜைமேல் இருந்த சாக்பீஸ் பெட்டியிலிருந்து ஒரு முழு நீள சாக்பீஸ்ை. எடுத்துக்கொண்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பி வகுப். புக்குப் போய் விட்டான். அங்கு அப்போது எல்லாரும் ஏன் தன்னையே வெறித்து வெறித்துப் பார்க்கிறார்கள் என்பது மட்டும்தான் அவனுக்குப் புரியாமல் இருந்தது. ரைட்டர், வராந்தாவில் நின்ற தலைமையாசிரியா, காரில் வந்திருந்த புதிய மீசைக்காரர் எல்லாருமே சாக்பீஸ் எடுக்கபபோன தன்னைப் பார்த்து ஏன் அப்படி முறைத்தார்கள் என்பது புரியாமல் சுதர்சனன் நெடுநேரம் குழம்பினான். சுதர்சனன் நாத்திகனாயிருந்தவன். ஆனால் நேர்மையான, சுயமரியா தைக்காரனாக அவன் என்றும் இருந்திருக்கிறான். பொய். சொன்னதில்லை. குடித்ததில்லை. புகை பிடித்ததில்லை. யாரையும் ஏமாற்றியதில்ல்ை. பேராசைப்பட்டதில்லை. தன்னளவு நேர்மையானவர்கள் மிகச் சிலரைத்தான் அவன் அந்த இயக்கத்தில் கண்டிருந்தான். அந்தச் சிலருடைய எண்ணிக்கைகூடப் பின்னால் வர வர மிகவும் குறைந்து போயிற்று. . ‘. . . . . . : நாத்திகனாயிருந்து கபடமும், வஞ்சகமும் அற்றவனாக இருந்த அவனுக்கு ஆத்திகர்களாயிருந்தும் வஞ்சகம்,கப்டம், சூது, பொய், பேராசை இவற்றால் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக முகம் காட்டும் பலரைப் பார்த்து வருத்தமாயிருந்தது. சமூகத்தில் படித்தவர்களும். மேல் மட்டத்தாரும் தங்கள் கய்ருபம் பிறருக்குத் தெரியவிடாமல் வேஷம் போட்டுக் கொண்டு நிற்கிற பல சந்தர்ப்பங்களை அவன் கண்கூடாகக் கண்டிருக்கிறான்.
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/70
Appearance