பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 69 தலைமையாசிரியர் வாசுதேவன், அருள்நெறி ஆனந்த மூர்த்தி, ஆதர்சபுரம் இளைய ஜமீன்தார் எல்லாருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட பல முகங்கள் இருப்பதை அவன் கண்டிருந்தான். . . , ஆனால் அவன் அப்படி இருக்க முடியவில்லை. நினைத் ததைப் பேசினான். பேசியதை ஒளிவு.மறைவோடு பேச ஒரு போதும் முயன்றதில்லை. சொல்லுக்கும் செயலுக்கும்இடை வெளிவிட அவன் அனுமதித்ததில்லை. நேர்மையான நாத்தி கனையும் அயோக்கியனான ஆத்திகனையும் ஒப்பிட்டுப் பார்த்தால்கூட அயோக்கியனான ஓர் ஆத்திகனுக்கே மதிப்பு தருகிற வகையில்தான் இன்றைய சமூக அமைப்பு இருந்தது. தலைமையாசிரியர் தன்னை விடாப்பிடியாகத் துன்புறுத்து வதற்கு அருள் நெறி ஆனந்தமூர்த்தியின் தாண்டுதலும் காரணமாக இருக்குமோ என்று சுதர்சனன் சந்தேகப்பட் டான். தலைமையாசிரியரே தன்னைப் பற்றிப் பிறரிடம் தான் இல்லாத வேளைகளில் எப்படித் துஷ்பிரிசாரங்கள் செய்து வருகிறார் என்பது பற்றி அவன் பலரிடம் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவற்றை முழுமையாக நம்ப வில்லை. - - அவன் திருவையாற்றிலே படிக்கறச்சேயே கருப்புச் சட்டையை மாட்டிண்டு பிள்ள்ையார் சிலையை உடைச்ச வன் காணும்' என்று ஊரில் அவனைப்பற்றிக் கொச்சை யாக ஒரு பிரச்சாரமே செய்திருந்தார் அவர். அவனைப் பற்றி இந்தவிதமாக முன்கூட்டியே எதிர்மறையாக ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கி அவன் பெயரைக் கெடுத்து விடுவதற்கு முயன்று கொண்டிருந்தார் தலைமையாசிரியர். அவர் தன்னிடம் கொடுத்திருந்த மெமோவுக்கு,மேலாக, நிதானமாகவும் தொனியில் அழுத்தமாகவும் பதில் எழுதிக் கொண்டிருந்தான் சுதர்சனன். . . . . . . மறுபடி அவனைக் கூப்பிட்டனுப்பிப் பன்னீர்செல்வம் போன்ற அரசியல் பேர்வழிகளை உள்ளே வரவழைத்துப் பேசுவது பற்றிக் கண்டித்துவிட்டுக் கவுண்டர் விட்டுத் பொ-5