உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 71 'நீங்க இப்பிடிக் கேட்டிங்கன்னா எல்லாரோட தவறு களுக்கும் வக்காலத்து வாங்க நீங்க குத்தகை எடுத்திருக்கீங்: களோன்னு நான் பதிலுக்குக் கேட்க வேண்டியதுதான்." தலைமையாசிரியர் கோபத்தோடு அவனை உற்றுப் பார்த்தார், அவன் அசையவில்லை. - . - ஒர் ஐந்து நிமிஷம் இருவருக்கு இடையே விரும்பத் தகாததொரு மெளனம் நீடித்தது. - "இது ஆஸ்திகாள் நிறைஞ்ச ஊர்! உங்களை மாதிரி .சு.ம. ஆட்களை எல்லாம் கட்டி மேய்க்கிறது என்னாலே முடியாத காரியம்...' - நீங்கள் கட்டி மேய்ப்பதற்கு நான் ஒன்றும் ஆடு மாடு இல்லை சார்...' - . . . . கவுண்டர் விஷயத்திலே ஜாக்கிரதையா நடந்துக் குங்கோ. இல்லாட்டா ரொம்பக் கேவலமாப் போயிடும். நீங்க இந்த ஸ்கூல்லே வேலை பார்க்கிறதனாலே உங்களை நான் எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கேன்." - ரொம்ப நன்றி சார்...' என்று எழுந்து வெளியேறி னான் சுதர்சனன். . . - உண்மையில் பார்க்கப் போனால் தனக்கு அறிமுகமில் லாத ஒரு நபர் சம்பந்தப்பட்ட அந்தத் திருமணத்திற்குத் தலைமை வகிப்பதில் சுதர்சனனுக்கு அப்படி ஒன்றும் பிரமாத ஈடுபாடு இல்லை. ஆனால் தலைமையாசிரியர் அதைப் பெரிதுபடுத்தியதன் காரணமாகவே அவனுக்கு அதில் இப்போது அக்கறையும், ஈடுபாடும் உண்டாகி கயிருந்தன. - - . . . . . . . . . அவர் பன்னீர்செல்வத்தை ஏதோ நாலாந்தரமான சமூக விரோதி என்பது போல் பேசிய ஏளனப் பேச்சே அவன் மேல் சுதர்சனன் அக்கறை காட்டக் காரணமா அயிருந்தது. . . . . . தான் எப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்று பிறர் அதிகாரம் செய்யத் தொடங்கினால்