உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 73 ஒருநாள் மாலை அருள்நெறி ஆனந்தமூர்த்தி தலைமை. யாசிரியர் வாசுதேவனைத் தம்முடைய பங்களாவிற்குக் கூப்பிட்டனுப்பியிருந்தார். . வாசுதேவனுக்கும் பெரிய மனிதர்கள், பணக்காரர்கள், பிரமுகர்களைப் போய்ச் சந்திப்பதிலும் அவர்களை முகஸ்துதி செய்வதிலும் ஆசை அதிகம், ஆனந்தமூர்த்தி கூப்பிட்டனுப்பிய தினத்தன்றும் வாசுதேவன் அவருடைய பங்களாவுக்குப் போயிருந்தார். - - "என்ன ஐயங்கார் சுவாமிகளே! அந்தப் புதுப் பையன் -தமிழ்ப் பண்டிட்தானே அவன்; இப்பிடி எல்லாம் திாறு மாறா மேடையிலே பேசறானே? ஏற்கெனவே இது அக்ரிகல் சுரல் சென்டர். நிலத்திலே எஸ்டேட்டுகளிலே வேலை செய்யற ஆட்களுக்கும் மிராசுதார்களுக்கும், எஸ்டேட்டு ஒனர்களுக்கும் ஏகப்பட்ட தகராறு இருக்கு. இவன் வேற வந்து புதுசு புதுசா எதை எதையோ கிளப்பிடுவான் போல இருக்கே? இப்படி ஆளுக்கெல்லாம் ஸ்கூல்லே அப்பாயிண்ட் மெண்ட் கொடுத்தால் ஊரே கெட்டுப் போகுமே? "நானாகவா அப்பாயிண்ட் பண்ணிட முடியும்? நான் வெறும் எக்ஸ்-அபீஷியோ மட்டும்தானே? எல்லாரும் சேர்ந்து சரீன்னு சொன்னா நானும் சரீன்னுட்டுப் போறேன்...” * - - - பூனையை மடியிலே கட்டிகிட்டுச் சகுனம் பார்த்தாப் பிலே இப்பிடி ஆளை எல்லாம் உள்ளே விட்டுட்டா ஊர் உருப்பட்டாப்லதான்.' * , X வந்திருக்கிறவன் சரியான சுயமரியாதைக் கட்சிக் காரன். திருவையாற்றிலே படிக்கறப்போ கருப்புச் சட்டை போட்டுண்டுதான் கிளாசுக்கே வருவானாம். பிள்ளையார் சிலை உடைப்பு, இந்தி அழிப்பு எல்லாத்திலியும் கலந்துண் டிருக்கான். அவன் வர்ரதும் போறதும் பேசறதும் கொள்ற தும் ஒண்ணும் எனக்குக் கட்டோட பிடிக்கலே...அடக்க ஒடுக்கமே கிடையாது, விறைச்சது விறைச்சாப்லே வந்து