பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 75 ஆனந்தமூர்த்தியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பம் டார், - - திரும்பி வருகிற வழியில் சுதர்சனன் குடியிருக்க வாடகை வீடு விட்டிருந்த கன்னையாப் பத்தர் எதிர்ப் படவே அவரிடமும் சுதர்சனனைப் பற்றித் தன் மனத் துக்குத் திருப்தி ஏற்படுகிற வரை கோள் சொன்னார் வாசு தேவன். t - - "எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது ஹெட் மாஸ்டர் வாள் 1 ஸ்கூல்லே வேலைக்கு வந்திருக்கிற மனுஷாள்னு சொன்னதுமே வாடகை மாசம் தவறாமே ஒழுங்காக் கிடைக்கும்னு வீட்டுச் சாவியை எடுத்துக்குடுத்து இருக்கச் சொல்லிட்டேன்.' . - என்னமோ ஜாக்கிரதையாய் பார்த்துக்கனும்! ஆள் ஒரு மாதிரி. ரொம்பத் திமிர் பிடிச்சவன், ஸ்கூல்லேயே இந்தி ஆளை வச்சு வேலை வாங்கறதுக்கு நான் படாத பாடு பட வேண்டியிருக்கு, கடவுள் நம்பிக்கை இல்லே. நல்லது கெட்டது மேலே நம்பிக்கை இல்லே. பெரியவங்க மேலே மரியாதை கிடையாது.” - 'இதெல்லாம் முன் கூட்டியே தெரிஞ்சிருந்தா நான் என் விட்டிலே இந்த ஆளை வாடகைக்கு வச்சிருக்க மாட் டேன் சாமி!" - - 'ஏதோ தெரியாத்தனமா வச்சிட்டீங்க. உடனே என்ன பண்ண முடியும்? முள்ளுமேலே விழுந்த வேஷ்டியை மெல்ல மெல்லத்தானே எடுக்கணும்?" - . . தலைமையாசிரியர் சுதர்சனன்ை எதிர்த்து ஒரு காம் பெய்ன் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். இரகசிய மாக அது சகலமுனைகளிலும் நடந்து கொண்டிருந்தது. ஆனால் சுதர்சனனின் தரப்பில் இப்படி எதுவும் நடக்க வில்லை. தலைமையாசிரியரை எதிர்த்து அவருடைய சாதி, குலம், கோத்திரத்தைச் சொல்லித் திட்டிய சிலரிட்ம்கூடச் சுதர்சனன் அந்தப் பேச்சை ஊக்கப்படுத்திப் பதில் சொல்ல