பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 7. 9 கொடுத்துத் தலையிட்டுக் காரியங்களைப் பார்த்திருக்க வில்லையானால் சுதர்சனனும் பன்னீர்செல்வமும் விடுதலை யாகி வெளியே வந்திருப்பதே சிரமமாகப் போயிருக்கும். திங்கள்கிழமை பள்ளிக்கூடம் திறந்ததுமே தலைமை பர்சிரியர் அவனுக்கு மற்றொரு மெமோ கொடுத்தனுப்பி னார். அதன் வாககங்கள் முன்னைவிட மிகவும் சூடாகவும் தீவிரமாகவும் இருந்தன. - . - தலைமையாசிரியரின் முந்திய மெமோக்களுக்கு அவன் கொடுத்த பதில்கள் திருப்திகரமாக இல்லாததாலும், பள்ளி யின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் சில வெளி விவகாரங்களில் அவன் தலையிட்டிருப்பதைத் தலைமை யாசிரியர் கவனத்துக்குக் கொண்டுவந்ததின் பேரில் நிர்வாகக்கமிட்டி அன்று மாலையே கூடி அவனை நேரில் விசாரிக்க விரும்புவதாகவும் அன்று மாலை ஆறுமணிக்கு இளைய ஜமீன்தார் பங்களாவில் அவன் தலைமையாசிரிய ரோடு ஆஜராக வேண்டும் என்றும் மெமோவில் குறித்திருந்: தது. சுதர்சனனுக்கு முதலில் கோபம் வந்தது. அப்புறம் சக ஆசிரியர்கள் சிலரை விசாரித்தபோது பள்ளி நிர்வாகக் கமிட்டி அவ்வாறு கூடி நிலைமைகளை ஆராய்ந்து முடி வெடுப்பது என்பது அந்தப் பள்ளியைப் பொறுத்தவரை நீண்டநாள் வழக்கம்தான் என்று எல்லாரும் தெரிவித் தார்கள். அவர்கள் அப்படித் தெரிவிக்கிறவரை அந்த விசாரணைக்குத் தான் போவதில்லை என்று எண்ணியிருந்த சுதர்சனன் இப்போது போவது என்று முடிவு செய்து கொண்டான். - - . . ஜமீன்தார் வீட்டிலே எக்ஸிகியூட்டிவ் போர்டு கூடி விசாரிக்கிற நிலைமைக்குப் போயாச்சுன்னா இனிமே வேலை தேறாதுன்னு அர்த்தம்'-என்று புலிக்குட்டி சீநிவாசராவோ யாரோ சொன்னபோது, "நான் அதைப்பத்தி ரொம்பக் கவலைப்படலெ! சுய மரியாதைக்கு இழுக்கு வர்ர இடத்திலே எப்படியாவது: ஒட்டிக்கிட்டு வேலை பார்க்கணும்னு எனக்கு ஒண்னும்