பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பொய்ம் முகங்கள் இளமை முறுக்கேறிய இரத்த ஓட்டத்தோடும், சுயமரி யாதை இயக்கம் கற்பித்துக் கொடுத்திருந்த துணிவோடும், கூழைக் கும்பிடுகளும், கூன் விழுந்த முதுகுகளும் இல்லாத தமிழாசிரியர்களைத் தேடினான் அவன். அப்படிப்பட்டவர் கள் மிக மிக அருமையாகவே கிடைத்தார்கள். ஒவ்வொரு தமிழாசிரியனுக்கும் முப்பது வயதுக்குள்ளேயே மனம் கிழடு தட்டி மூத்துப் போவதைக் கண்டு வேறு அவன் எரிச்ச பிச்சாண்டியா பிள்ளையிடம் மாவட்டத் தமிழாசிரியர் கழகத்தலைவரும், செயலாளரும் அந்த வட்டாரத்துப் பணக்காரர்களின் பட்டியலை விசாரித்து எழுதிக்கொண் டிருந்ததைப் பார்த்துச் சுதர்சனன் இதைத்தான் நினைத் தான். - மாலை நாலரை மணியானதும் அவன் தலைமையாசிரி யருக்கு ஒரு துண்டுத்தாளில், 'நான் ஆசிரியர்கள் ஒய்வு அறையில் இருக்கிறேன். எப்போது புறப்பட வேண்டுமோ அப்போது சொல்லி அனுப்பவும்'-என்று எழுதிக் கொடுத் தனுப்பினான். அப்புறம் நாற்காலியை எடுத்து வேப்பப் மரத்தடியில் போட்டு உட்கார்ந்து ஏதோ ஒரு வாரப் பத்திரிகையை எடுத்துப் புரட்டலானான். ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குப் புறப்பட்டுப் போயினர். ஐந்தரை மணிக்குப் ப்யூன் வந்து சுதர்சனனைத் தலைமை யாசிரியர் கூப்பிடுவதாகக் கூப்பிட்டான். r " சுதர்சனன் தலைமையாசிரியர் அறைக்கு விரைந்தான். தலைமையாசிரியருடைய மேஜையில் மேலாக ஒரு டேபிள் வெயிட் கண்ணாடிக் குண்டுக்குக் கீழே அவன் சற்று முன் அவருக்கு எழுதியனுப்பிய துண்டுத்தாள் இருந்தது. அவனைப் பார்த்ததும் அவர் கூப்பாடு போட்டு இரையத் தொடங்கினார். . . . நீர் உம்மைப் பத்தி என்ன நினைச்சிண்டிருக்கிறீர்னே எனக்குத் தெரியலே. நான் ஹெட் ஆஃப் தி இன்ஸ்டிடியூஷன் கிற முறையிலே உமக்கு மெமோ எழுதியனுப்பறது. சர்க்