உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 83. குலர் விடறது. உம்மைக் கூப்பிடறது எல்லாம் செய்ய முடியும். நீர் எப்படி இதுமாதிரி எல்லாம் எனக்கு எழுதி அனுப்பலாம்? இதை எல்லாம் செய்யறதுக்கு உமக்கு என்ன அதிகாரம் இருக்கு எந்தக் கப்பாஸிட்டியிலே நீர் இதையெல்லாம் செய்யறி.ர்? இங்கே நான் ஹெச். எம்மிா? இல்லே நீரே ஹெச். எம்னு உமக்கு நினைப்பா? தெரியா மத்தான் கேட்கிறேன்.” . இதற்கு சுதர்சனன் பதில் சொல்லவில்லை. ஏதோ ஆத்திரத்தில் அவர் கத்துவதாக அவனுக்குத் தோன்றியது. "ஏன் பதில் சொல்லாம நிற்கிறீர்?" "வெளியூர்லேருந்து உங்க பேருக்கு நான் ஒரு லெட்டர் எழுதறது எப்படித் தப்பில்லையோ அப்பிடியே இதை எழுதினதும் தப்பில்லே. தப்பா நினைக்க ஆரம்பிச்சிட்டா எல்லாமே தப்புத்தான் சார்-' 该 "இந்த நியாயம்லாம் எனக்கு தேவை இல்லே மிஸ்டர் சுதர்சனம்! ஸ்கூல் பிரெமிஸஸ்லேருந்து எனக்கு அட்ரஸ் பண்ணி இனிமே எதையும் நீர் ஆள் மூலமா எழுதி அனுப்பப் படாது. அப்படி அனுப்பிச்சா அதைப் பத்தி நான் ரொம்ப வnரியஸ்ஸா வியூ பண்ண வேண்டியிருக்கும்.' சரி சார் அனுப்பலே..." என்று ஒரே வரியில் அதை முடித்துவிட்டான் அவன். . . . . . . . . . . . . - "நான் சைக்கிளிலே போகப் போறேன். நீர் நடந்து வந்துடும். கமிட்டி ஜமீன்தார்வாள் வீட்டிலே கடறது." சுதர்சனன் தலையை அசைத்தான். தலைமை யாசிரியர் வாசுதேவன் டர்பன், கோட்டு, டை எல்லாம் தரித்து பிரிட்டீஷ் இம்பீரியலிஸத்தின் சின்னமான பழைய இந்திய உடையில் ஜமீன்தார் வீட்டுக்குப் புறப்பட்டார். சுதர்சனன் வழக்கம்போல நாலு முழம் வேட்டி, அரைக்கைச் சட்டை, ஒரு கைத்தறித் துண்டு சகிதம் நடந்தே ஜமீன்தார் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். -