8 சுதர்சனனின் கேள்வி ஜமீன்தாருக்கு எரிச்சலுட் 'டியது, வேலைக்கு வந்து. சிறிது காலம்கூட ஆகாத ஒரு புதிய தமிழ் ஆசிரியர் பள்ளிக்கூட நிர்வாகக் குழுவைப் பற்றியே எதிர்த்துக் கேட்கிற துணிச்சல்காரனாக இருந் ததை ஜமீன்தாரால் மட்டுமில்லை மற்ற முக்கியஸ்தர் களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தலைமை யாசிரியருக்கோ ஜமீன்தார் தன் மேல் எரிந்து விழுந்து ஆத்திரப்படப் போகிறாரே என்று பயமாகக்கூட இருந்தது. பள்ளிக்கூடம் விட்டதும் அங்கிருந்து சுதர்சனனைத் தன் னோடு அழைத்து வராமல் தான். தனியே சைக்கிளில் வந்தது நல்லதாகப் போயிற்று என்று தோன்றியது. அவருக்கு. எத்தனையோ முரண்டுபிடித்த ஆசிரியர்களை எல்லாம் அவர் பார்த்திருந்தார். ஆனால் அந்த முரண்டும் பிடிவாதமும் எல்லாமே வேலை பறி, போய் விடுமோ?-- என்ற எல்லை வந்ததும் தானாகத் தளர்ந்து போய் வழிக்கு வந்து தங்கக் கம்பியாய் இழுத்த இழுப்புக்கு இழுபட்டுச் சொன்னபடி கேட்பார்கள். ஆனால் சுதர்சனனோ வேலை பறி போய் விடுமோ?-என்ற பயம் அறவே இல்லாதவனா யிருந்தான். நிமிர்ந்து நடந்தான். - ஊரில் அந்தஸ்துள்ளவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் அவன் ஒரு சிறிதும் பயப்பட வில்லை. யார் முன்னிலையிலும் எந்தச் சூழ்நிலையிலும் தனக்கு நியாயம் பட்டதை அஞ்சாமல் பேசினான் அவன். இப்படி மனிதர்களை ஆசிரியர் தொழிலில் தம் கண்காணத் தலைமையாசிரியர் இந்த பூமியில் எதிர்கொள்ள நேர்ந்ததே கிடையாது. வேலை போய்விடும் என்றால் நடுங்கிச் சாகிற ஆட்களையே அதிகமாக அவர் கண்டிருந்தார். தமிழாசிரியர் சுதர்சனன், நிர்வாகக்குழுவைச் சேர்ந்த வங்க மட்டும் இங்கே இல்லே. மத்தவங்களும் இருக்காங்க - என்றதுமே, அப்போ நாங்க வீட்டுக்குப் புறப்படறோம் பொ-6
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/87
Appearance