பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தச்ாரதி & 7 உனக்கு ஞாபகமிருக்கா? 4 4 * * ,

  • * * * * * ****

'உன்னையெத்தான்ப்பா கேக்கிறேன். வாயிலே என்ன கொழுக்கட்டையா அடைச்சிருக்கு பதில் சொல்லேன்.' சுதர்சனன் ஜமீன்தாரை நேருக்குநேர் ஏறிட்டு நோக்கிப் புன்முறுவல் பூத்தான். பதறவில்லை. பயப்பட வில்லை. தயங்கவில்லை. - - - "என்னப்பா சிரிக்கிறே? நான் கேட்டதுக்குப் பதில் சொல்லேன், ...” நீங்க கொஞ்சமாவதுiமரியாதையாகக் கேட்டிருந்தால் எனக்கு புதில் சொல்லணும்னு தோணும் சார். நீங்க என்ன டான்னா ஆட்டுக்காரன் மாட்டுக்காரனைப் பேசறமாதிரி மிரட்டிப் பேசlங்க. சாதாரணமா மரியாதை உள்ள எந்த மனுஷனுக்குமே இப்படிப் பேசினாக் கோபம் வரும்.' நீ சுயமரியாதைக்காரனா இருக்கிறதாலே உனக்கு இன்னும் அதிகமாக் கோபம் வருதாக்கும்?’’ "அப்படித்தான்னு வச்சுக்குங்களேன்." . . . நீ பேசறதை எல்லரம் பார்த்தா ரொம்பத் திமிர் பிடிச்சிவனா இருப்பே போலிருக்கே? இத்தனை நாள் உன்னை ஏன் வேலையை விட்டுப் போகச் சொல்லலேன்னு எனக்கு இப்போ ஹெட்மாஸ்டர் மேலேதான் கோபம் வருது. கொஞ்சமாவது மேலே இருக்கிற மனுஷாளுங்க கிட்ட பணிவு, விநயம், எதுவுமே இல்லாமே நீ என்னப்பா ஆளு" - - . "பணிவு விநயம் எல்ல்ாம் வேணும்னு ஆசைப்படற வங்க யாரோ அவங்களுக்கும் அதெல்லாம் கொஞ்சமாவது இருக்கணும் சார்! எல்லாமே ஒன்ல்ே டிராஃபிக்கா இருந் தால் எப்படி?’ - "சரி சரி இனிமே உங்கிட்டக் கேக்கிறத்துக்கு ஒண்னு மில்லே! நீ போகலாம்'-என்று கோபமாகச் சொன்ன்