பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 7 தெரிந்தது. அதனால்தானோ என்னவோ தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவனுடைய ஒய்வு வேளையில் அவன் ஓய்வு கொள்ள முடியாமல் எந்த வகுப்புக்காவது 'ஸப்டிடியூட்"டாக அவனை அனுப்பிக் கொண்டிருந்தார் அவர். ... • - மெமோ வில் தன் இன்ஷியலைப் போட்டு பியூனிடம் கொடுத்தனுப்பிவிட்டுத் திரும்பி நின்று தற்செயல்ாக எதிர்ப்புறம் தெரிந்த விளையாட்டு மைதானத்தைப் பார்த்த சுதர்சனனுக்கு மேலும் அதிக ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. - ஆறாவது ஃபாரம் "ஏ" பிரிவுக்கு ஆங்கிலப் பாடம் எடுக்கப் போகவேண்டிய தலைமையாசிரியர் விளையாட்டு மைதானத்தில் மாணவிகளோடு "ரிங்டென்னிஸ் விளை பாடிக் கொண்டிருந்தார். அது ஒரு கோ-எஜுகேஷன்" பள்ளிக்கூடம். தலைமையாசிரியர் வாசுதேவனோ மனைவியை இழந்தவர். அது மிகவும் செழிப்பான மலை யடிவாரத்து நாட்டுப்புற கிராமம். ஆகையினால் பெண் .களுக்கு எல்லாம் ஆற்றோரத்துத் தாவரம்போலச் சிறுவயதி லேயே ஒரு மதமதப்பும் வளர்ச்சியும் வசீகரமும் வந்திருந் தன. ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்புவர்ை. :படிக்கும் மிகவும் சிறிய பிராயத்துப் பெண்களே இப்படி வளர்ச்சிக்கு விலக்கில்லை என்றால் ஒன்பதாவது வகுப்பு முதல் பதினோராவது வகுப்புவரை படிக்கும் பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். r - இந்த மேல்வகுப்புப் பெண்கள் மூன்று வகுப்புக்களுக்கு .மான எல்லா செக்ஷன்களிலும் சேர்ந்து இருபது முப்பது பேர் இருந்தார்கள். பிஸிகல் எஜூகேஷன் டிரெயினிங்' அல்லது டிரில் கிளாஸ் எனப்படும் உடற் பயிற்சி வகுப்பு இவர்களுக்கும் உண்டு. சட்டப்படி பயிற்சி பெற்ற பெண் உடற்பயிற்சி ஆசிரியை ஒருத்தியைத்தான் இந்த மாணவி களைக் கவனித்துக்கொள்வதற்கு நியமிக்க வேண்டும். பெண் ஆசிரியை கிடைக்காததால் முப்பது மாணவிகளில்