நா. பார்த்தசாரதி 89 அந்த நேரம் பார்த்துத் தலைமையாசிரியர் நின்று நிதானித்து விதிகள் எல்லாம் படித்துக் கொண்டிருந்தது ஜமீன்தார் உட்பட அங்கிருந்த பெரிய மனிதர்களுக்குப் பொறுமையைச் சோதித்திருக்க வேண்டும். . "என்னய்யா பெரிய எம், இ. ஆர். நாம ஸ்கூல் நடத்த றோம். நமக்கு ஒத்துவராத ஆளை வெளியிலே அனுப்ப றோம். நாம நடத்தற ஸ்கூல்ல்ே நமக்கு இந்த உரிமைகூட இல்லியா?-என்றார் நாட்டுப்புறத்து மனப்பான்மை யுள்ள ஒரு கமிட்டி உறுப்பினர். கமிட்டியிலுள்ள இப்படிப் பட்ட உறுப்பினர்களோடு தலைமையாசிரியர் எப்போதும் சிரமப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு விதிமுறைகளைப் புரியவைப்பது பெரும்பாடாயிருக்கும். எந்த விதிமுறை களுக்கும் கட்டுப்படாமல் முரட்டடியாக விஷயங்களைப் பேசும் பிரமுகர்களும் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் ஆதர்சபுரத்தில் அதிகம், . "மிஞ்சிப்போனால் என்னய்யா பண்ணிடப் போறான்? இப்போ நம்ம கொல்லுக்காரன்புத்துார் சுப்பா நாயுடுவின் .மகன் கோபாலகிருஷ்ணன்தானே ஐயா டி.பி.ஐ.? அவங் கிட்டப்போய் மேலே ஆகவேண்டியதைப் பார்த்துக்கலாம்' என்று இப்படிச் சண்டி வழக்குப் பேசுகிறவர்களைக் கட்டிக் கொண்டு கல்வி இலாகா விதிகளையும் சட்டதிட்டங்களை .யும் அநுசரிப்பதற்கு முடியாமல் திண்டாடும் சந்தர்ப்பங்கள் தலைமை ஆசிரியர் வாசுதேவனுக்குப் பலமுறை ஏற்பட் டிருக்கின்றன. . . . . . அப்போது எஜூகேஷனல் ரூல்ஸைப் புரட்டிப்பார்த்து விட்டு 'முதல்லே எக்ஸ்பிளநேஷன் கேட்கணும். அது திருப் தியா இல்லாட்டா சஸ்பெண்ட் பண்ணலாம். ரொம்பப் பெரிய nரியஸ் மிஸ்காண்டக்ட் ஏதாவது இருந்தா லொழிய டிபார்ட்மெண்டைக் கன்ஸ்ல்ட் பண்ணாமே டிஸ்மிஸ் பண்றது நல்லா இருக்காது'-என்றார் தை նԱն} Lն யாசிரியர் வாசுதேவன். . . . . . . . . . . . .
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/91
Appearance