дії т. பார்த்தசாரதி - 9 | கிள்ளுக்கீரை மாதிரி. கண்டைக்காய்க் கிரிக்கெட் கிளப் பாட்மிண்டன் கிளப்'- மீட்டிங் என்றால்கூட அதை முறை. யாகவும் பங்க்சுவலாகவும், கட்டுப்பாடாகவும் நடத்துகிற, ஜமீன்தார் பள்ளி நிர்வாகக்குழு மீட்டிங்கை மட்டும் கண்ட படி தாறுமாறாக நடத்துவதை வாசுதேவனே வெறுத்திருக் கிறார். சுதர்சனனைப்ப் பல காாரணங்களால் வாசு தேவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பள்ளி நிர்வாகக் குழுக் கூட்டத்தை ஜமீன்தார் நடத்துகிற விதத்தைக் கண்டித்துவிட்டு அவன் வெளியேறிய கம்பீரத்தை அந்தரங்க மாகப் பாராட்டினார் அவர். நீண்ட காலமாகத் தான் பழிவாங்காமல் தயங்கி அட்ஜஸ்ட் செய்து கொண்டுபோன ஒரு விஷயத்துக்குச் சுதர்சனன் பழிவாங்கி ஜமீன்தாருக்குப் புத்தி புகட்டிவிட்டதாகத் தோன்றியது வாசுதேவனுக்கு. பள்ளி நிர்வாகக் குழுக் கூட்டத்துக்கென்று "அஜெண்டா' டைப் செய்து கொண்டுபோய்க் கொடுத்திருந்தும் மறந்து போய்க் கூட்ட நேரத்துக்கு வேறெங்காவது வெளியே புறப் பட்டுப் போயிருப்பார் ஜமீன்தார். தலைமையாசிரியருக்கு வீண் அலைச்சல்தான் மிச்சமாயிருக்கும். பிற வேலைகளும் கெடும். ஜமீன்தாரின் அந்த அகந்தைக்கும் பணத்திமிருக்கும் சுதர்சனன் சரியான அடி கொடுத்திருப்பதாகத் தோன்றி. யது தலைமையாசிரியருக்கு. அவனுடைய நாத்திக மனப் பான்மை அவருக்குப் பிடிக்காவிட்டாலும், அவனுடைய தீவிர சுயமரியாதை அவருக்குப் பிடிக்காவிட்டாலும் அத் தனை பெரிய பிரமுகர்களையும் ஜமீன்தாரையும், பார்த்து. "நான் கூட்டத்துக்கு வர்ரதுக்கு முன்னாடி மீட்டிங்கை ஒழுங்கா நடத்துய்யா, அதுக்கப்புறம் நான் வரேன்'என்று துணிச்சலாக எழுந்திருந்து சொல்லிவிட்டு சுதர்சனன் லாக்-அவுட் செய்த துணிவை அவர் இன்னும் உள்ளுர. வியந்து கொண்டிருந்தார். அவனைப் பிடிக்கவில்லை. என்றாலும் அவன் கம்பீரம் அவருக்குப் பிடித்தது.
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/93
Appearance