9 3 - பொய்ம் முகங்கள் மெல்ல மெல்லச் சிறிது நேரத்தில் ஜமீன்தார் வந்திருந் தவர்களோடு சீட்டாடத் தொடங்கிவிடவே சுதர்சனன் விஷயமாக எந்த முடிவும் எடுக்கப்படாமலும் நிர்வாகக் குழுக் கூட்ட மினிட்ஸில் எந்தக் குறிப்புக்களும் எழுதி உறுப். பினர்களிடம் கையெழுத்து வாங்கப்படாமலுமே கூட்டம் கலைந்து விட்டது. தலைமையாசிரியர் சிறிது நேரம் வீணே உட்கார்ந்து காத்திருந்து பார்த்துவிட்டு, 'அப்போ நான் புறப்படறேன் சார்-என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டதைக் கூட ஜமீன்தாரோ, மற்றவர்களோ கவனித்து லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. அந்த அலட்சியம், அந்த உதாசீனம், அந்தப் பணச்செருக்கு எல்லாமே தலைமையாசிரியருக்கும் நெஞ்சில் உறுத்தியது. ஆனால் அதை எதிர்க்க, அதனோடு மோதி உராய அவரால் முடியவில்லை. திரும்பிப்போகும்போது காபி ஹோட்டல் வாசலில் ஆதர்சபுரம் பஸ்-ஸ்டாண்ட் அருகே சுதர் சனனைப் பார்த்தார் தலைமையாசிரியர். - சுதர்சனனும் அவரைப் பார்த்ததும் அருகே வந்தான். அவரும் பிரேக்கை அமுக்கிப் சைக்கிளை நிறுத்திக் கொண்டு கீழே இறங்கினார். இருவருக்குமே பரஸ்பரம் என்ன பேசிக் கொள்வதென்று ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. "என்னையே விட்டுடுங்க. இன்னிக்கு நான் இந்த ஸ்கூல்லே வேலை பார்க்கிறேன். நாளைக்கி இல்லேன்னு வச்சுக்க லாம். நீங்கள்ளாம் எப்பிடி சார் இந்த மாதிரி அதாகரிகத்தைப் பொறுத்துக்கிறீங்க? ஜமீன்தார் அவரோட சிட்டாடறத்துக்கும் குடிச்சுக் கும்மாளம் போடறதுக்கும் வந்த ஆளுங்களை எல்லாம் கூட வச்சுக்கிட்டே ஸ்கூல் - கமிட்டி மீட்டிங்கையும் நடத்திவிடுவாரு அவங்கள்ளாம் உட்கார்ந்திருப்பாங்க. என்னைப்போல ৪৫ ஸ்கூல் வாத்தியாரை மட்டும் ஏதோ கொலைக்குத்தம் பண்ணின வன்மாதிரி நிறுத்தி வச்சுப் பேசுவாங்க. அதை நான் சகிச்சுக்கனுமாக்கும். படிச்சவங்களா இருக்கிற உங்களை மாதிரி ஆட்களே எப்படி சார் இதை எல்லாம் ஏத்துக்
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/94
Appearance