உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பொய்ம் முகங்கள் தற்கு அவ்வளவு பயம் அவருக்கு. சுதர்சனனின் தைரியத். தையும், தன்மானத்தையும் பார்த்து வியந்து புகழத் தயாரானதுடன், அதை வெளிப்படையாகச் செய்யத், தயங்கிய மனத்தோடு அவனிடம் நின்று பேசிய தலைம்ை யாசிரியர் அவனோடு தான் பேசிக் கொண்டிருப்பதை ஜமீன்தாருக்கோ, அருள்நெறி ஆனந்த மூர்த்திக்கோ. கவுண்டருக்கோ யாராவது பார்த்துக் கொண்டுபோய்ச் சொல்லிவிடுவார்களோ என்று பயந்துவிட்டார். . . அவர் பயந்து கொண்டுதான் போகிறார் என்பது சுதர்சனனுக்கும் புரிந்தது. தலைமையாசிரியர் போன சிறிது நேரத்திற்கெல்லாம் தலைமைத் தமிழாசிரியர் பிச்சாண் டியா பிள்ளை எதிர்ப்பட்டார். அவர் கையில் ஏதோ நோட்டுப் புத்தகம், ரசீதுப் புத்தகம் எல்லாம் இருந்தன. தமிழாசிரியர் மாநாட்டுக்காக அவர் தீவிரமாக வசூலில் இறங்கியிருக்கிறார் என்று தோன்றியது. சுதர்சனனைப் பார்த்ததுமே அவர் ஆரம்பித்தார்: - என்ன? தகராறு எந்த மட்டிலே இருக்கு? எல்லாம். சரியாச்சா இல்லியா?" - - "எந்தத் தகராறு? என்று ஒன்றும் தெரியாததுபோல் அவரைப் பதிலுக்குக் கேட்டு வைத்தான் சுதர்சனன். 'அதான் ஸ்கூல் தகராறு...' நான் தகராறு ஒண்ணும் பண்ணலியே? அவங்கதான் மெமோ, எக்ஸ்பிளநேஷன்னு இழுத்தடிச்சிக்கிட்டிருக் காங்க. ஒண்ணுமில்லாத விஷயத்துக்காக எக்ஸிக்யூடிவ் போர்டுக்கு முன்னாடி நான் பதில் சொல்லனும்கிறாங்க. ஜமீன்தார் ஸ்கூல்லே வேலை பார்க்கிற வாத்தியாருங்கள் . ளாம் தனக்கு அடிமைங்கன்னு நினைக்கிறாரு...' அப்ப நான் வரட்டுமா? வசூல் வேலையா அலைஞ்சுக் கிட்டிருக்கேன். இன்னும் நெறைய எடத்துக்குப் போக: ணும்.' " -