பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. முனைவர் அர. கமலதியாகராசன், ஆய்வு உதவியாளர், களஞ்சியமையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். _ பதிவமைப்பு முறை இந்தக் கலைச் சொல்லகராதியில் பதிவுகள் தலைமைப்பதிவு, துணைப்பதிவு என இரு நிலைகளில் தரப்பட்டுள்ளன. lubricator - உயவிடுவான் lug washer நிரப்புத்தகடு luminous flame - ஒளிர் சுடர் (எந்திரப் பொறியியல்) என்பன தலைமைப் பதிவுகள். accumulator - திரட்டு மின்கலம் ... battery திரட்டு மின்கல அடுக்கு ... box திரட்டு மின்கலப் பெட்டி (மின் பொறியியல்) levelling மட்டகை precise ... நுண் மட்டகை profile..... - அமைப்பு மட்டகை (கட்டுமானப் பொறியியல்) எனத் தலைமைப் பதிவின்கீழ் புள்ளியுடன் தரப்பட்டவை துணைப் பதிவுகள். இவ்வாறு தலைமைப் பதிவுச்சொல்லை முன்னோ பின்னோ கொண்டமையும் கூட்டுச்சொற்கள் எல்லாம் துணைப் பதிவுகளாய்த் தரப்பட்டுள்ளன. கூட்டுச் சொற்களில் தலைமைப் பதிவுச்சொல் சேருமிடங்களில் புள்ளிகள் இடப்பட்டுள்ளன.