பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





1. இடத்தை மாற்றுங்கள்





வந்திருக்கின்ற அனைவரையும் இந்த விளையாட்டில் சேர்த்துக் கொண்டு ஆடலாம்.

இருக்கின்ற ஆட்டக்காரர்கள் எண்ணிகைக்கு ஏற்ப நாற்காலிகள் இருந்தால், பெரிய வட்டம் ஒன்றைப் போட்டு, அதைச் சுற்றிக் கொஞ்சம் இடம் விட்டு விட்டு, நாற்காலிகளைச் போடச் செய்து, அவற்றில் ஒவ்வொரு ஆட்டக்காரரையும் முதலில் உட்காரச் செய்யவேண்டும்.

வட்டத்தின் அளவு 30 அடி விட்டம் இருந்தால் நல்லது. நாற்காலி இல்லை என்றால், சுற்றிவட்டம் போட்டு, வட்டக் கோட்டிலே சிறு சிறு வட்டங்களை இட்டு அதனுள் நிற்கச் செய்யலாம். ஆட்டத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு எண் என்று 'நம்பர்' கொடுத்திட வேண்டும்.

ஆடும் முறை : அங்கு நடுவில் ஒருவரை நிற்கச் செய்ய வேண்டும். அவர் முதலில் அமர்ந்திருக்கும்