பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கண்களை கைக்குட்டையால் கட்டுவதற்கு முன்பாகக் கூட, யார் யார் எங்கெங்கே நிற்கிறார்கள் என்பதை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்ள அனுமதிக்கலாம்.

கண்களை கட்டி விட்ட பிறகு, அவரை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு நிற்கச் செய்து, வட்டத்தின் கோட்டின் மேல் சுற்றி நிற்பவர்களில் எவர் பெயரை யாவது ஒருவரைக் குறிப்பிட்டு, விளையாட்டை நடத்திக் கொண்டிருப்பவர் அறிவிக்க வேண்டும்.

பெயர் குறிப்பிட்டவர், அந்த இடத்தை விட்டு வேறு எங்கும் நகராமல் அதே இடத்தில்தான் நிற்க வேண்டும். மற்ற ஆட்டக்காரர்களும் தாங்கள் நின்று கொண்டிருந்த இடங்களிலேயே நிற்க வேண் டும். ஏனென்றால், குரலைக் கேட்டு எளிதில் அடை யாளம் தெரிந்து கொண்டுவிட நேரும் அல்லவா!

துப்பறிபவர் கைகளைத் துளாவியபடியே நடந்து சென்று அடுத்தவர்களைத் தொட்டு அடையாளங் கண்டபடியே முன்னேற வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் பெயருக்குரியவரைப் பிடித்துவிட் டால், பிடிபட்டவர் துப்பறியும் துரையாக மாற ஆட்டம் தொடரும்.

துப்பறிபவரால் ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், வேறொருவரை துப்பறியும் துரையாக நிற்க வைத்து, முன்போல் ஆட்டத்தைத். தொடரலாம்.