பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5. பந்து பிடி ஆட்டம்

ஆட்டத்தில் பங்கு பெறுகிறவர்களேயெல்லாம் நேர்க்கோடு ஒன்றினைப் போட்டு, அதன்மேல் வரிசை யாக நிறுத்தி வைத்திட வேண்டும்.

விளையாட்டை நடத்துகின்ற ஆசிரியர் அல்லது முக்கியஸ்தர் 5 அடியிலிருந்து பத்தடி தூரத்திற்குள்ளாக (ஆட்டக்காரர்களின் தன்மையைப் பொறுத்தது) ஒரு இடத்தைக் குறித்து, அங்கே ஒரு பந்துடன் நின்று கொண்டு ஆட்டத்தைத் தொடங்கவேண்டும்.

வரிசையாக நின்று கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் எண் (நம்பர்) ஒன்றைத் தந்து விட வேண்டும். 1,2,3,4 என்பதாக எண்கள் ஒவ்வொரு வருக்கும் தருகிற பொழுது, அனைவரும் தனக்கு உரிய எண் எது என்பதை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்.

பங்கு பெறுபவர்களின் பெயர்கள் தெரிந்திருந்தாலும், ஆட்டத்திற்கு அவரவர் பெயரையே பயன்படுத்திக் கொள்ளலாம்.