பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24



காற்றடைக்கப்பட்ட வண்ணபலூனை ஒவ்வொருவருக்கும் ஒன்று என்று முதலில் கொடுக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு ஆளுக்கொரு ஸ்கேல் அல்லது ஒரடி நீளமுள்ள குச்சி ஒன்றையும் தர வேண்டும்.

யாருக்கு எந்த வண்ணத்தில் பலூன் தரப்பட்டிருக்கிறது என்பதையும் ஒரு தாளில் குறித்துக் கொண்டு, அவர்களே வாளி அல்லது பாத்திரம் வைக் கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து 30 அடிக்கு அப்பால் குறிக்கப்பட்டிருக்கும் கோட்டின்மீது போய் நின்று கொள்ளுமாறு செய்திட வேண்டும்.

இப்பொழுது எல்லோருடைய பலூன்களும் வாளிக்குள்ளே போடப்பட்டிருக்கிறது. வாளிக்கு அருகில் ஸ்கேல் அல்லது குச்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சைகைக்கு பிறகு ஆட்டம் ஆரம்பிக்கிறது.

வரிசையாக நின்று கொண்டிருந்த அனைவரும் சைகைக்குப் பிறகு வாளியை நோக்கி ஓடி, அங்கிருக்கும் ஸ்கேல் அல்லது குச்சியை எடுத்து, வாளியில் இருக்கும் தனது பலூனேக் குச்சியால், வெளியே தள்ளி எடுத்த பிறகு, யார் திரும்பவும்: ஒடத்தொடங்கிய கோட்டை வந்து அடைகிறாரோ அவரே போட்டியில் வென்றவராவார். - -